கோடையில் தயிர் மிகவும் அவசியம் என்று கூறப்படுகிறது. ஆனால், அது விரைவில் புளித்துவிடும். தயிரைப் புளிக்காமல் வைத்திருக்க சில குறிப்புகள் இதோ!

By Karthikeyan S
Apr 13, 2025

Hindustan Times
Tamil

தினமும் தயிர் சாப்பிடுவதால் சிலருக்கு உடல் சூடு அதிகரிப்பது, செரிமானக் கோளாறுகள் போன்ற பிரச்னைகள் உருவாக வாய்ப்புள்ளது. 

Image Source From unsplash

மிகவும் சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்கும் பாலில் தயிர் ஊற்றக்கூடாது. சற்று சூடான பாலில் தயிர் ஊற்றி மூடி வைக்க வேண்டும்.

Image Source From unsplash

தயிர் ஊற்ற மண் அல்லது செராமிக் பாத்திரங்களைப் பயன்படுத்தினால் தயிர் கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும்.

Image Source From unsplash

தயிர் ஊற்றுவதற்கு முன்பு சற்று சூடான பாலில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்தால், அது புளிப்பதில்லை.

Image Source From unsplash

தயிர் ஊற்றிய பாலில் ஒரு பச்சை மிளகாய் அல்லது உலர்ந்த மிளகாய் சேர்த்தால் தயிர் கெட்டியாகப் பதமாகும்.

Image Source From unsplash

தயிர் ஊற்றிய பாத்திரத்தை குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும். வெப்பம் அதிகமாக இருக்கும் இடத்தில் வைத்தால் விரைவில் புளிக்கும்.

Image Source From unsplash

தயிர் தயாரான பின்பு அதனை காற்று புகாத பாத்திரத்தில் வைத்து குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.

Image Source From unsplash

தயிர் எடுக்கும் போது சுத்தமான, உலர்ந்த ஸ்பூனைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய ஸ்பூனை மீண்டும் தயிரில் வைக்கக்கூடாது.

Image Source From unsplash

தயிரில் அதிகப்படியான ஈரப்பதம் இருப்பதால், உடலில் சளி தங்கவும் வாய்ப்புள்ளது. இதனால், சிலருக்கு உடல் சூடாக இருப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

Image Source From unsplash

வீட்டுக்குள்ளேயே ஏசியை ஆன் செய்துவிட்டு குளிர்ச்சியான சூழலில் இருப்பதை அனைத்து வயதினரும் விரும்புகிறார்கள். ஆனால் நீண்ட நேர ஏசியில் இருப்பது சில உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்