கணவன் - மனைவி சண்டையின்போது சொல்லக் கூடாதவை?

By Marimuthu M
Mar 09, 2024

Hindustan Times
Tamil

கணவன் - மனைவி இடையே சண்டையின்போது கோபம், ஆத்திரம், இயலாமையில் காயப்படுத்தும் வார்த்தைகளை உபயோகித்து விடாதீர்கள்.

’உன் கூட வாழ்றது போரிங்காக இருக்கு’ என்ற வார்த்தையை சொல்லாதீர்கள். இது எதிர்மறையான ஒப்பீடுகளை உண்டுசெய்யும்

’நீ ரொம்ப சுயநலவாதி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால், உறவில் விரிசலை ஏற்படுத்திவிடும்.

‘நான் உன்னை நம்பவே மாட்டேன்’என்ற வார்த்தையை உபயோகிக்காதீர்கள். அது அடிப்படை நம்பிக்கையையே காலி செய்துவிடும்.

’ஏன் தான் உன்னை திருமணம் செஞ்சேனோ?’ இந்த வார்த்தை காலத்தால் அழியாத வடுவைத் தரும். எனவே, இந்த வார்த்தையை உபயோகிக்காதீர்கள்.

’நீ உங்க அப்பா, அம்மா மாதிரி நடத்துக்கற’ என்னும் வார்த்தை, உங்களது குறுகிய மனப்பான்மையை பிரதிபலிக்கும்

’இஷ்டம் இருந்தா வாழு, இல்லைன்னா விட்டுடு’என்னும் வார்த்தை வாழ்க்கைத் துணை பிடிக்காமல் வாழ்கின்றாரோ என்னும் பிம்பத்தை உண்டு செய்துவிடும். 

சப்போட்டா நன்மைகள்