புதுமணத்தம்பதிகள் ஒற்றுமையாக இருக்க செய்யவேண்டியது என்ன?

By Marimuthu M
Nov 21, 2024

Hindustan Times
Tamil

கணவன் - மனைவி இருவரும் வெவ்வேறு வீட்டில் பிறந்து வளர்ந்தவர்கள், அதில் ஒருவருடைய வீட்டின் பழக்கங்களை பிடிக்கவே இல்லையென்றாலும் இன்னொருவர் மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்

கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் பிடிக்கும் பிடிக்காத விஷயங்களை வெளிப்படையாகப் பேசிக்கொள்ளுதல் நல்லது. 

வெகுநாட்களாக ஜோடிகள் இருவரும் பேசிக்கொள்ளாதபோது, ஒரு சிறு பிரச்னை என்றுவரும்போது, பிடிக்காத விஷயங்களைச் சொல்லி குத்திக்காட்டுவது அபத்தம். 

கணவர் வீட்டில் நடப்பதை நம் அம்மா, அக்கா, சித்தி என ஒன்றுவிடாமல் ஒப்பிப்பது தவறு. அதே தான் மனைவியின் நடத்தையை கணவர் தம் வீட்டிலும் சொல்லக்கூடாது. இருவரும் கலந்துபேசிவிட்டு சொல்வது இதில் அடங்காது. 

புதுமணத்தம்பதியிடையே ஒரு சிறு பிரிவு ஏற்படும்போது ஒருவரைப் பற்றி இன்னொருவர் சொந்தபந்தங்களிடம் தவறாகப் பேசக்கூடாது. காத்திருக்க வேண்டும். எல்லாம் சரியாகும். 

கணவன் - மனைவி இடையே இருக்கும் பிரச்னையைத் தீர்க்க முயற்சிப்பவர், வளர்ப்பவராக இருக்கக்கூடாது. சில நேரங்களில் தீர்க்க முயற்சிப்பவர்களாலே நிறைய உறவுகள் பிரிகின்றன. 

மனைவி வீட்டில் ஏதாவது சீர் வந்துசெய்துவிட்டால், கணவனை அதைச்செய் இதைச்செய் என பதற்றத்துக்கு மனைவி ஆளாக்குவதும், பெண் வீட்டாரிடம் எப்போதும் கணவன் அதிகாரத்தொனியில் நடப்பதும் கூடாது. 

விட்டுக்கொடுத்தல், பொறுமை, நம் இணை காட்டும் அன்பைப் புரிந்துகொள்ள முயற்சித்தல் இவைதான் புதுமணத் தம்பதிகளின் ஒற்றுமைக்கான அச்சாரம். 

எந்தவொரு பிரச்னை என்றாலும் ஒரு வீட்டின் நான்கு சுவர்களுக்குள் பேசி முடித்துக்கொள்ளுதல் உறவுக்கு நன்மை தரும். 

முந்திரி பருப்பின் ஆரோக்கிய நன்மைகள்