மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் சிஎன்ஜி வேரியண்ட்டில் கிடைக்கிறது. இந்த காரில் என்னென்ன சிறப்பம்சங்களை அந்நிறுவனம் வழங்கியுள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.
சிஎன்ஜி ஸ்விஃப்ட் ஒரு கிலோ சிஎன்ஜி எரிவாயுவில் 32.82 கிமீ மைலேஜையும் வழங்குகிறது. இது 1.2 லிட்டர் G சீரிஸ் இரட்டை VVT இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 69.75 பிஎச்பி பவரையும், 101.8 பிஎச்பி டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
மாருதி சுஸுகி சிஎன்ஜி ஸ்விஃப்ட் காரின் மூன்று மாடல்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றின் விலை எவ்வளவு? இதைப் பார்ப்போம்.
ஸ்விஃப்ட்டின் விஎக்ஸ்ஐ (ஓ) சிஎன்ஜி 5 எம்டி வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8,19,500. ஸ்விஃப்ட்டின் விஎக்ஸ்ஐ (ஓ) சிஎன்ஜி மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8,46,500.
ஸ்விஃப்ட்டின் XXI CNG 5 MT வேரியண்ட்டின் விலை ரூ.9,19,500 எக்ஸ்ஷோரூம். மாருதி சுஸுகி புதிய தலைமுறை ஸ்விஃப்ட் சிஎன்ஜியின் அனைத்து வகைகளிலும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது.
சுஸுகி கனெக்ட், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி விண்ட், வயர்லெஸ் சார்ஜர், 7 இன்ச் ஸ்மார்ட் பிளே ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஆறு ஏர்பேக்குகள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் 60:40 ஸ்பிளிட் ரியர் இருக்கைகள் உள்ளன.
தினமும் கார் ஓட்டுபவர்களுக்கும் அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும் சிஎன்ஜி பெஸ்ட்
வெறும் வயிற்றில் பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 அற்புதமான நன்மைகள் இதோ!