தூங்கும்போது ஏற்படும் தூக்க பக்கவாதத்தை தவிர்க்க பின்பற்ற வேண்டிய வழிகள் என்ன என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Aug 06, 2024
Hindustan Times Tamil
தூக்கத்தின் போது உணர்வு விழிப்பு ஏற்பட்ட பின்னரும் உடலை அசைக்க முடியாத நிலை ஏற்படுவதை தூக்க பக்கவாதம் என்கிறார்கள். இதனை அமுக்குவான் பேய் என்றும் அழைப்பதுண்டு
மோசமான தூக்க சுகாதாரம், தூக்கமின்மை, மனஅழுத்தம் போன்ற காரணங்களால் இவை ஏற்படுகின்றன. எனவே இதை தவிர்ப்பதற்கான வழிகளை பார்க்கலாம்
திட்டமிடுதல்
நாள்தோறும் எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதை சரியாக திட்டமிட்டுகொள்ள வேண்டும். 24 மணி நேரத்தில் குறைந்தது 6 முதல் 7 மணி நேரமாவது தூக்கம் இருக்க வேண்டும்
சீரான தூக்கம்
உங்கள் தூக்க திட்டமிடலில் உறுதியாக இருக்க வேண்டும். நாள்தோறும் திட்டமிட்ட நேரத்தில் தூங்கி பின்னர் விழிக்க வேண்டும். இதன் மூலம் சீரான தூக்க பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்
எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களை தவிர்த்தல்
ஸ்மார்ட்போன், டிவி அல்லது பாடல் கேட்பது போன்ற கேட்ஜெட்களை தூங்குவதற்கு முன் தவிர்க்க வேண்டும். இவற்றின் காரணமாக தூங்க வேண்டிய நேரத்தை அதிகரிப்பதுடன் ஆழ் மன அழுத்த நிலை அதிகரிக்கிறது
தூங்குவதற்கு முன் வயிறு நிரம்பி சாப்பிடுவது, கஃபைன் பானங்கள் பருகுவது வயிறு உப்புசம் அல்லது அமில வீச்சை ஏற்படுத்தும். தூங்குவதற்கு 2 முதல் 3 மணி நேரம் முன்பாக இரவு உணவை முடித்துவிட வேண்டும்
உடற்பயிற்சி
ஆழ்ந்த, அமைதியான தூக்கத்தை பெறுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக உடற்பயிற்சி இருந்து வருகிறது. எனவே தவறாமல் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மனஅழுதத்தை கட்டுப்படுத்தலாம்
தியான பயிற்சி மேற்கொள்ளுதல்
மனஅழுத்தம், அதிகமாக யோசித்தல் போன்றவையும் தூக்க பக்கவாதத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே மனஅழுதத்தை கட்டுப்படுத்த தூங்குவதற்கு முன் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தியானம் மேற்கொள்ளலாம்