சர்க்கரை பயன்படுத்தாமல் இருந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jun 02, 2025
Hindustan Times Tamil
நாள்தோறும் பல்வேறு வகைகளில் நாம் பயன்படுத்தும் சர்க்கரை 30 நாள்கள் சேர்த்துக்கொள்ளாவிட்டால் உடலிலும், மனதளவிலும் பல்வேறு நேர்மறையான மாற்றங்கள் நிகழ்கின்றன
சர்க்கரை சேர்த்துக்கொள்ளாவிட்டால் உடலிலும், மனதிலும் ஏற்படும் மாற்றங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
சர்க்கரை எடுத்துக்கொள்ளும் அளவை குறைத்துக்கொண்டாலே ரத்த சர்க்கரை அளவு குறைவதுடன், இன்சுலின் அளவும் கட்டுக்குள் இருக்கும்
கூடுதல் சர்க்கரை சேர்ப்பதை குறைத்து, சமச்சீரான டயட்டை பின்பற்றினாலே ஆரோக்கியமான உடல் எடையிழப்புக்கு வழிவகுக்கும்
PEXELS
சர்க்கரை பானங்கள் பல் சொத்தை, பாக்டீரியாக்களை அமிலமாக மாற்றி எனாமலில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சர்க்கரை அளவை வெகுவாக குறைப்பதால் வாய்வழி சுகாதாரம் பேனி பாதுகாக்கப்படும்
PEXELS
சர்க்கரை குறைப்பது, குறிப்பாக அதிக ப்ரக்டோஸ் நிறைந்த கார்ன் சிரப்புகளை குறைப்பதன் மூலம் கல்லீரலில் கொழுப்பு சேர்வது குறைக்கப்படுவதுடன், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
PINTEREST
அதிகப்படியான சர்க்கரை இதய நோய் பாதிப்புகளுடன் தொடர்புடையதாக உள்ளது. எனவே இதய ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்க சர்க்கரை அளவை வெகுவாக குறைப்பது நலம்
PEXELS
மனநிலை, அறிவாற்றல் செயல்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதுடன், மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அபாயத்தைக் குறைக்கிறது
வெற்றிகரமான நபர்கள் நேரத்தை மிகவும் திறம்பட பயன்படுத்தும் வழிகள் இதோ!