நாள்தோறும் முட்டை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தில் நிகழும் மாற்றங்கள், நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Mar 12, 2024
Hindustan Times Tamil
அடிப்படை ஊட்டச்சத்துகள் முட்டையில் அடர்த்தியாக நிறைந்திருக்கின்றன. புரதம், கொழுப்பு, மைக்ரோ நியூட்ரியண்ட்களான போலேட், பி வைட்டமின், இரும்பு, வைட்டமின் ஏ, செலினியம், துத்தநாகம் போன்ற சத்துக்களின் ஆதராமாக திகழ்கின்றன
உடல் ஆரோக்கியத்துக்கு அடிப்படை தேவையாக இருந்து வரும் மைக்ரோ, மேக்ரோ நியூட்ரியண்ட்கள் அதிகமாக இருப்பதால் முட்டையை தினமும் சாப்பிடலாம்
இதய ஆரோக்கியத்தை பேனி காப்பது முதல் உடலுக்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்கள் வழங்குவது, ஒமேகா 3 தேவையை பூர்த்தி செய்வது வரை பல்வேறு நன்மைகள் முட்டையில் இருக்கின்றன
உடலுக்கு தேவைப்படும் எச்டிஎல் எனப்படும் நல்ல கொல்ஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவுகிறது. இந்த கொழுப்புகள் பல்வேறு விதமான நோய் பாதிப்புகளில் இருந்து தடுக்க உதவுகிறது
கோலின் என்கிற டயட் நார்சத்துக்களை கொண்டதாக உள்ளது முட்டை. இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தருகிறது
உடலில் இருக்கும் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால்களை, எச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ராலாக மாற்ற உதவுகிறது. இதனால் இதயம் தொடர்பான நோய் ஆபத்து குறைந்து அதன் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது
முட்டையில் இருக்கும் லுடீன், ஜீக்சாந்தின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மாகுலர் சிதைவு, கண்புரை பாதிப்பு ஆபத்துகளை குறைக்கிறது
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால் அதன் தேவையை பூர்த்தி செய்வதோடு ரத்தத்தில் இருக்கும் ட்ரைகிளைசரைடு அளவை குறைக்க உதவுகிறது
உங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஏன் ஒப்பிடக்கூடாது? எச்சரிக்கை! மோசமான பெற்றோராகிவிடாதீர்கள்!