கணவன் - மனைவி இடையே இருக்கும் தற்காலிகப்பிரிவு எதைப் போதிக்கிறது?

By Marimuthu M
Sep 06, 2024

Hindustan Times
Tamil

கணவன் - மனைவி இடையே இருக்கும் தற்காலிகப்பிரிவு இருவரும் ஒன்றாக இருந்த மகிழ்ந்த தருணங்களை நினைவுபடுத்தும். அது ஒருவர் மீது மற்றொருவருக்குப் பாசத்தை அதிகரிக்கும்

கணவன் - மனைவி இடையே இருக்கும் தற்காலிகப்பிரிவு ஒருவரின் நல்ல குணங்களை, மற்றொருவரைப் பின்பற்ற வைக்கும். 

கணவன் - மனைவி இடையே இருக்கும் தற்காலிகப்பிரிவு, இருவரின் அந்நியோன்யத்தை சீர்குலைக்க தூண்டிவிடும் நபர்களை வெளிச்சமிட்டுக் காட்டும்.

 கணவன் - மனைவி இடையே இருக்கும் தற்காலிகப்பிரிவு, ஒருவர் செய்த தவறுகளைத் திருத்திக்கொள்ள வழிவகுக்கும். 

கணவன் - மனைவியின் தற்காலிகப் பிரிவு, வாழ்க்கையை நடத்த உதவும் பொருளாதாரப் பாடத்தைக் கற்றுக் கொடுக்கும்

கணவன் - மனைவியின் தற்காலிகப்பிரிவு, வாழ்ந்து ஜெயித்தவர்களின் அந்நியோன்யத்தை, விட்டுக்கொடுத்து வாழ்வதால் கிடைக்கும் நன்மைகளைக் கற்றுக்கொடுக்கும்

கணவன் - மனைவியின் தற்காலிகப் பிரிவு, வீட்டு வேலை செய்ய ஆண்களையும், வெளிவேலைகளை செய்ய பெண்களையும் பழக்கும்

கணவன் - மனைவியின் தற்காலிகப் பிரிவு முடிந்து, மீண்டும் சேர்கையில் பலமான பிணைப்பினை ஏற்படுத்தும். 

குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : ஆன்மீகம் என்பது அன்பே என குழந்தைகளுக்கு எடுத்துக்கூறும் வழிகள் எவை தெரியுமா?