குழந்தைகள் அடம்பிடிக்க காரணம் என்ன? 

By Priyadarshini R
Nov 29, 2024

Hindustan Times
Tamil

குழந்தைகள் பேசும்போது பெற்றோர் வேலையிலோ அல்லது ஃபோனிலோ மூழ்கியிருந்தால், அவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதை உணர்கிறார்கள். இதனால் அவர்கள் பெற்றோர் கூறுவதை கேட்பதில்லை.

குழந்தைகள் அன்னியமாகவும் அல்லது புரிந்துகொள்ளப்படாமலும் உணர்ந்தால் அவர்கள் தங்கள் பெற்றோர்களுடனான உரையாடலை நிறுத்திக்கொள்கிறார்கள்.

பெற்றோர் தொடர்ந்து கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டே இருக்கும்போது, அது குழந்தைகளுக்கு அதிகப்படியாகத் தோன்றும். 

சில நேரங்களில் குழந்தைகள், கவனத்தை ஈர்ப்பதற்காகவும் நீங்கள் கூறுவதை கேட்காமல் இருக்கலாம். 

தெளிவற்ற அறிவுறுத்தல்கள் உங்கள் குழந்தைகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் அவர்கள் பெற்றோர் கூறுவதை கேட்காமல் போய்விடுகிறார்கள். 

உங்கள் குழந்தைகளிடம் கடினமான வார்த்தைகளை உபயோகிக்கும்போது, கத்தும்போது அல்லது அதிகம் அவர்களை விமர்சிக்கும்போது குழந்தைகளுக்கு பயம் ஏற்படுகிறது.

அதிக விதிகள் குழந்தைகளுக்கு அதிகம்தான். இதனால் அவர்கள் உங்களின் அறிவுறுத்தல்களை கேட்பதில்லை, தொடர்ந்து விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும் அவர்களை போராளிகளாக்குகிறது.

சியா விதை தருகின்ற நன்மைகள்