புகைப்பிடிப்பதை மறக்க என்ன செய்யலாம்?

By Marimuthu M
Jun 05, 2024

Hindustan Times
Tamil

புகைபிடிக்கத் தூண்டும் சூழ்நிலைகள் அல்லது இடங்களைத் தவிர்க்கவும்

 தினசரி சிகரெட் நுகர்வினை படிப்படியாக குறைக்க முயற்சித்துப் பாருங்கள்.

புகைப் பிடிக்காமல் இருக்க மன அழுத்தத்தை நிர்வகிக்க, உடற்பயிற்சி, தியானம் அல்லது பிற பொழுது போக்குகளில் ஈடுபடுங்கள்

புகைப்பிடித்தல் செயல்பாட்டின் வெளியேறும் நிகழ்வுகளில் ஒன்று சுவாசப் பயிற்சி. அதனை தினசரி செய்ய முயற்சியுங்கள்.

புகைப்பிடித்தல் செயல் பாட்டிலிருந்து வெளியேற ஏராளமான தண்ணீர் மற்றும் மூலிகை தேநீர் போன்ற சூடான திரவங்களைக் குடிக்கவும்

மஞ்சள், கீரைகள், செர்ரி, அவுரி நெல்லி, ஆலிவ், வால்நட் பருப்புகள், விதைகள், பீன்ஸ் மற்றும் பயிறு போன்ற அழற்சி எதிர்ப்பு உணவுகளை உங்கள் உணவில் சேர்ப்பது சிகரெட்டில் இருந்து மீண்டு நல்வாழ்வுபெற உதவும். 

யூகலிப்டஸ்  எண்ணெய்களின் சில துளிகளை சூடான நீரில் சேர்த்து நீராவியை உள்ளிழுப்பது சிகரெட்டில் இருந்து மீளவும் நுரையீரலை பலப்படுத்தவும் உதவுகிறது

சிறுநீீரகத்தை பாதுகாக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்