வாழ்க்கையில் வெற்றியாளனாக செய்யவேண்டிய விஷயங்கள் என்ன?

By Marimuthu M
Aug 08, 2024

Hindustan Times
Tamil

ஒவ்வொரு நாளும் பிறக்கும்போது நாமும் அதனுடன் சேர்ந்து புதிதாகப் பிறக்கிறோம். எனவே, நாமும் தினமும் புதிய ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எழுங்கள்

எந்தவொரு நல்ல விஷயத்தையும் தொடங்கும்போது அதற்கு நம் உடல், மனம் ஆகிய இரண்டும் முதலில் ஒத்துழைக்காது. எனவே, நாம் அதைப் பயிற்சியாக நினைத்து சிறிதுசிறிதாக முயற்சி எடுத்து செய்யவேண்டும்

 ஒவ்வொரு நாள் உறங்கும்போது அன்றைய நாளில் செய்த தவறுகளையும், அதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை குறித்தும் யோசிக்க வேண்டும்

வாழ்வில் உங்களை சிலர் வேண்டுமென்றே கோபமூட்டும் போது அவர் செய்த நல்ல விஷயங்களை நினைவுகூர்ந்து பாருங்கள்

தினமும் சிறிது நேரம் அமைதியாக இருந்து உங்கள் பணிகளில் என்ன முன்னேற்றம், பின்னேற்றம் நடந்தது என பகுத்தாய்வு செய்து பாருங்கள்

 எந்தவொரு பணியைச் செய்யும்போதும் ஆர்வமாகவும், இதில் என்ன புதிதாக கற்றுக் கொள்ளலாம் எனவும் யோசிக்க வேண்டும்

தினமும் சூரிய ஒளியில் அரை மணிநேரமாவது வாக்கிங் செல்லுங்கள். உங்கள் சிந்தனைகளில் ஒரு புதிய தெளிவு கிடைக்கும்

 முடிந்தவரை செல்போன், லேப்டாப் போன்ற ஸ்க்ரீன் பயன்பாட்டில் இருந்து தள்ளி இருங்கள்

அமைதியான தூக்கம் வேண்டுமா? இந்த டிப்ஸ்களை தெரிஞ்சிக்கோங்க!

image credit to unsplash