மூட்டு வலி தீர என்ன செய்யணும்?

By Marimuthu M
Jan 13, 2024

Hindustan Times
Tamil

எடைக்கட்டுப்பாடு மிக முக்கியம். எடை அதிகம் இருந்தால் மூட்டு வலி ஏற்படும்.

 நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளை செய்து தசைகளை வலுப்படுத்தினால் எடை சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படும். மூட்டு வலி குறையும்.

Enter text Here

நாட்டு வெல்லத்தை உணவில் சேர்க்கலாம். அதில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. முழங்கால் வலிக்கு தீர்வு தரும். 

துளசி இலைகள் அழற்சி எதிர்ப்பு, ஸ்பாஸ்மோடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. முழங்கால் வலியில் நிவாரணம் பெற துளசி டீ குடிக்கலாம்.

உணவில் அடிக்கடி தயிர்சேர்த்தால் நல்லது. தயிரில் கால்சியம் இருந்தால் எலும்புகளை வலுப்படுத்தலாம். 

அரை டீஸ்பூன் வெந்தயப் பொடியை நீரில் சேர்த்து, உணவிற்குப் பின் குடிக்க முழங்கால் வலி நீங்கும். 

வெள்ளைப் பூண்டினை உணவில் சேர்க்கவும். அதில் இருக்கும் டயால் டிஸல்பைடு என்ற பொருள், சைட்டோ கைன்களின் விளைவைக் குறைக்க உதவுகிறது. இதன்மூலம் மூட்டு வலி குறையும்.

30 வயது அடைந்துவிட்டால் உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகள் எவை என்பதை பார்க்கலாம்