90-களில் பிறந்தவர்களுக்கு திருமணம் தள்ளிப் போவதற்கான காரணங்கள் என்ன? யார் மாறவேண்டும்!

By Marimuthu M
Jul 01, 2024

Hindustan Times
Tamil

90-களில் பிறந்த வரன்களுக்கு ஜாதகப் பொருத்தம் 95% பொருத்தம் இருக்கவேண்டும் என நினைக்கிறோம். அதைத்தவிர்த்து 55 விழுக்காடு முக்கியப் பொருத்தம் இருந்தால்கூட திருமணத்தை முடிக்கலாம்

 90-களில் பிறந்தவர்கள் பலரும் எமோஷனலானவர்கள், தன் எமோஷனலான உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் வாழ்க்கைத் துணை கிடைக்காததால் திருமணத்தைத் தவிர்க்கின்றனர். அப்படி அமையும் பட்சத்தில் எமோஷனல் சப்போர்ட் தருவது முக்கியம்

 நம் மகனுக்கோ, மகளுக்கோ ஒரு  ஊருக்குள்ளேயே வரன் கொடுக்க/ எடுக்க வேண்டும் எனும் சிந்தனையைத் தூக்கிபோடுங்கள். தூரம், தொலைவைப் பார்க்காமல் நம் பிள்ளைகள் நலமுடன் இருந்தால்போதும் என்று நினையுங்கள். 

 நம் மகனுக்கோ, மகளுக்கோ ஒரு  ஊருக்குள்ளேயே வரன் கொடுக்க/ எடுக்க வேண்டும் எனும் சிந்தனையைத் தூக்கிபோடுங்கள். தூரம், தொலைவைப் பார்க்காமல் நம் பிள்ளைகள் நலமுடன் இருந்தால்போதும் என்று நினையுங்கள். 

90-களில் பிறந்த வரன்கள் பலருக்கு நிதி நிலைமையில் பார்க்கையில் பெரியளவில் செட்டில் ஆகி இருக்க மாட்டார்கள். அதைப் புரிந்துகொண்டு வரன் நேர்மையானவரா என்பதைப் பார்த்து முடிக்கலாம். 

அப்படி நிதி நிலையில் ஓரளவு செட்டில் ஆகிவந்தாலும் வயதை வைத்து, அவரை சிலர் புறக்கணிப்பதால் 90களில் பிறந்தவர்களுக்கு திருமணம் தாமதம் ஆகிறது. அப்படி இருக்கையில், அதை ஒரு பொருட்டாக எடுக்காமல் வரன் நல்லவரா என்பதைப் பார்த்து மணமுடிக்கலாம்

Age is Just Number எனும் வாய் வார்த்தை மட்டுமல்ல, அது ஒரு வாழ்வியல். வயதை வைத்து ஆண்களையோ,பெண்களையோ தட்டிக்கழிப்பது தவறானது. ஆணைவிட பெண் வயது அதிகமாக இருந்தால்கூட அது ஒரு பெரிய விஷயமில்லை எனும் உளவியல் புரிதல் தேவை.

90-களில் பிறந்த வரன்கள் பலர் கண்ணாடி அணிந்துள்ளனர், முடி நரைத்துள்ளது, சிலருக்கு வழுக்கை இருக்கிறது, சிலருக்கு தொப்பை கூட இருக்கிறது. ஆனால், ரிலேஷன்ஷிப் என்பது இரு மனம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை மட்டும் பெற்றோர் உணர்ந்தால், கண்டிப்பாக 90-களில் பிறந்தவர்களுக்கு பெண்ணோ/ஆணோ கொடுத்து விடுவார்கள்.

சூப்பரான 7 சமையல் குறிப்புகளை இங்கு தெரிந்துகொள்ளலாம்