உடல் எடை குறைப்பில் இருக்கிறீர்களா? நீங்கள் இந்தப்பழங்களை மறந்தும் கூட சாப்பிடுவிடாதீர்கள்! 

By Priyadarshini R
Sep 17, 2023

Hindustan Times
Tamil

அன்னாசி  அன்னாசி பழம் இயற்கையாகவே கொழுப்பை குறைக்கும் பழம் என்று கூறப்படுகிறது. அன்னாசியில் இயற்கையாகவே இனிப்பு சுவை மிகுந்து இருக்கும். இதில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இதில் சர்க்கரை அளவும் அதிகம் உள்ளதால், ஒரு குறிப்பிட்ட அளவு இதை எடுத்துக்கொள்ளலாம். 

திராட்சை  இதில் அதிகம் உள்ள தண்ணீர் இது எடை குறைப்புக்கு உதவக்கூடிய பழமாக உள்ளது. ஆனால், திராட்சையில் இயற்கையாகவே சர்க்கரை அதிகம் உள்ளது. அது குட்டியாக இருப்பதால் நாம் கடகடவென்று சாப்பிட்டுவிடுவோம். இதனால், அதிக சர்க்கரை நமது உடலுக்குள் சென்றுவிடும். 

செரிகள்  குட்டிகுட்டியான செரி பழங்களில், கலோரிகள் குறைவாக உள்ளதுதான். இதனால், உடலின் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறப்பான தேர்வாக இருக்கும். ஆனால், இதில் சர்க்கரை அதிகம் உள்ள இனிப்பான பழம். இதை அதிகம் எடுத்துக்கொண்டால், உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மாம்பழம்  மாம்பழங்கள், மாங்காய்களை பிடிக்காத மனிதர்களே இல்லை என்று கூறலாம். அந்தளவுக்கு மாம்பழங்கள் அனைவருக்கும் பிடித்த பழம். எல்லோரும் கோடைக்காலம் எப்போது வரும் என்று மாம்பழங்களுக்காக காத்திருப்பார்கள். இது ஊட்டச்சத்தும் நிறைந்த பழம். உடல் எடை குறைப்புக்கும் உதவுகிறது. ஆனால் குறைவாக எடுத்துக்கொண்டால் மட்டுமே அந்த பலன் கிட்டும். நீங்கள் இதை அதிகம் எடுத்துக்கொண்டால் நீங்கள் இழக்க விரும்பும் எடையை குறைக்க முடியாது. ஏனெனில், இதில் அதிகம் உள்ள சர்க்கரை உங்கள் உடல் எடையை அதிகரித்துவிடும். 

லிச்சி  லிச்சி அதன் இனிப்பு சுவைக்காகவே பெயர் போனது. இது இனிப்புடன் கூடிய வித்யாசமான சுவை கொண்ட பழம். எனவே எடை குறைப்பு பயணத்தில் உள்ளவர்கள் இந்த பழம் அதிகம் எடுத்துக்கொள்வதையும் கைவிடவேண்டும். ஏனெனில் இதில் சர்க்கரை அளவு அதிகம். 

அத்தி  இனிப்பு சுவை மிகுந்த பழம். எடையிழப்பு பயணத்தில் இருப்பவர்கள் இந்த பழத்தை கட்டாயம் தேர்ந்தெடுப்பார்கள். ஏனெனில், இது ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பழமாகும். ஆனால், இதில் கலோரிகள் மற்றும் இனிப்பு சுவை அது இரண்டுமே இதில் அதிகம். இதில் ஆரோக்கிய நன்மைகள் அதிகம் உள்ளன. நீங்கள் இதை எடுத்துக்கொண்டால், குறைவான அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். 

டேங்கிரைன்கள்  டேங்கிரைன்கள் என்பவை சிட்ரஸ் வகை பழங்கள். இவை மிகவும் ஆரோக்கியமானவை, இதில் சர்க்கரை அதிகம் உள்ளது. திராட்சை போன்ற சர்க்கரை நிறைந்த பழம்தான் இதையும் அளவாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். வாழைப்பழம்  வாழைப்பழத்தில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால் மற்ற அனைத்து பழங்களையும்விட இதில் அதிகம் சர்க்கரை உள்ளது. எனவே எடையிழப்பு பயணத்தில் உள்ளவர்கள், மேலே குறிப்பிட்டுள்ள பழங்களை சாப்பிடக்கூடாது.  

மே 12-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்