’அதிக வெப்பநிலையால் அசௌகரியம் ஏற்படலாம்!’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
By Kathiravan V Mar 23, 2024
Hindustan Times Tamil
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி உள்ளது. குறிப்பாக ஈரோட்டில் அதிகபட்சமாக 39.0 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது என சென்னை மண்அல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
’அதிக வெப்பநிலையால் அசௌகரியம் ஏற்படலாம்!’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இன்று முதல் மார்ச் 29ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
மார்ச் 23 தேதி முதல் மார்ச் 27ஆம் தேதி வரை தமிழ்நாட்டுல் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 23 மற்றும் மார்ச் 24 தேதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது, ஓரிரு இடங்களில் அதிக அசௌகரியம் ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
’மேஷம் முதல் மீனம் வரை!’ நீச பங்க ராஜயோகம் என்றால் என்ன? நீசம் பெற்ற கிரகம் என்ன செய்யும்?