மஞ்சள் தூள் தண்ணீர் குடிப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை பாருங்க!

By Pandeeswari Gurusamy
May 15, 2024

Hindustan Times
Tamil

மஞ்சள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் வெந்நீரில் மஞ்சளை கலந்து குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

தினமும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி பார்ப்போம்.

தினமும் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

காலையில் வெறும் வயிற்றில் சிறிது மஞ்சளை சுடுதண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வீக்கம் பிரச்சனை குறையும்.

மஞ்சள் கலந்த தண்ணீரைக் குடிப்பது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது முகத்தில் முகப்பரு மற்றும் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும் முகத்தின் பொலிவை அதிகரிக்கிறது.

மஞ்சள் தூள் கல்லீரலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்களை வெளியேற்றி, கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களைப் புதுப்பித்து, கல்லீரலை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளும்.

இதய பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மே 20-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்