சிலோன் முட்டை கிரேவி சாதம் செய்யத்தேவையான பொருட்கள்: - தேங்காய் பால் – 1/2 கப்,
- கிராம்பு – 2,
- இலவங்க பட்டை – 1 சிறியது,
- விருப்பப்பட்டால் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் – சிறிது,
- உப்பு – தேவைக்கேற்ப,
- எண்ணெய் – 2 மேசைக்கரண்டி,
- கொத்தமல்லி இலை – அலங்கரிக்க
சிலோன் முட்டை கிரேவி சாதம் செய்முறை:-
- முட்டைகளை நன்கு வேக வைத்து, ஓட்டினை நீக்கி மொத்தமாகவோ அல்லது பாதியாகவோ வெட்டிக்கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி கிராம்பு, இலவங்கப்பட்டை, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
- தேங்காய் பால் சேர்க்கவும். சிறிது நீர் சேர்த்து கிரேவியை ஓரளவுக்கு மாவுபோல் செய்யவும். இதை 5 முதல் 7 நிமிடங்கள் மெதுவாக கொதிக்க விடவும்.
- வேகவைத்த முட்டைகளை கிரேவியில் சேர்த்து, 2–3 நிமிடங்கள் ஊற விடவும். கடைசியில் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
- இந்த சிலோன் முட்டை கிரேவி ரெசிபியை சாதத்தில் கலந்து பரிமாறினால், சுவையான சிலோன் முட்டை கிரேவி சாதம் ரெடி!
கவனம் மக்களே.. சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் எந்த 3 ராசிகளுக்கு பாதகம்!