கண்களை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கும், கூர்மையான பார்வையை பெறுவதற்கு தேவைப்படும் வைட்டமின்கள், தாதுக்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Feb 12, 2024

Hindustan Times
Tamil

குறிப்பட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஊட்டச்சத்துகள் கண்களின் ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கின்றன. இதந் மூலம் வயது மூப்பு காரணமாக ஏற்படும் மாகுலர் சிதைவு, கண்புரை பாதிப்பு, கிளாக்கோமா, நீரிழிவு காரணமாக விழித்திரை பாதிப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கலாம்

வைட்டமின் சி, ஈ போன்றவை கண்களின் ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கும் வைட்டமின்களாக உள்ளன

பீட்டா கரோடீன், தாவரங்களில் இருந்து ஆதாரமாக கிடைக்கும் ப்ரோ வைட்டமின் ஏ கரோடினாய்டுகள் வைட்டமின் ஏ சத்துக்களை தருகிறது. சீனி கிழங்கு, பசலை கீரை, பூசணி, கேரட், சிவப்பு மிளகாய் ஆகியவற்றில் பீட்டா கரோடீன் நிறைந்துள்ளது

தண்ணீரில் கரையக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட் ஆக வைட்டமின் சி உள்ளது. குடைமிளகாய், ஆரஞ்சு, கிவி, ப்ரோக்கோலி, ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றில் உள்ளது

மற்றொரு தண்ணீரல் கரையக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட்களாக வைட்டமின் ஈ நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதாரமாக திகழ்கிறது. பாதாம், நிலக்கடலை, சூரியகாந்தி விதை ஆகியவற்றில் கிடைக்கிறது

கண்களின் ஆரோக்கியத்துக்கு துத்தநாகம் அடிப்படையான தாது சத்தாக உள்ளது. சிப்பிக்கள், நண்டு, சீரியல்கள், பீப், பன்றி இறைச்சிகளில் இவை அதிகம் இருக்கின்றன

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கண்களின் ரெடினாவுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. சாலமன் மீன், ஆளி விதை, சியா விதை, கொட்டை வகைகளில் இவை அதிகம் உள்ளன

லூடீன், ஜீயாக்சாந்தின் போன்ற கார்டினாய்ட்கள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கேல், பசலை கீரை, முட்டைகோஸ், ப்ரோகோலி,  பட்டாணி, முட்டை, கார்ன் போன்றவையில் உள்ளன

30 வயது அடைந்துவிட்டால் உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகள் எவை என்பதை பார்க்கலாம்