விசுவாவசு தமிழ் புத்தாண்டு மூலம் கோடீஸ்வர யோகத்தை பெற்ற ராசிகள்

Canva

By Suriyakumar Jayabalan
Apr 11, 2025

Hindustan Times
Tamil

தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத முதல் நாளில் பிறக்கின்றது. இந்த ஆண்டு வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. சூரிய பகவான் 12 ராசிகளில் முதல் ராசியாக விளங்கக்கூடிய மேஷ ராசியில் நுழையும் நாள்தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் ஆண்டின் கணக்குப்படி விசுவாவசு ஆண்டு பிறக்க உள்ளது. இதற்கு உலக நிறைவு என்று பொருளாகும். 

Canva

2025 ஆம் ஆண்டு பிறக்க உள்ள விசுவாவசு தமிழ் புத்தாண்டில் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய மாற்றங்கள் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ஜொலிக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

Canva

தமிழ் புத்தாண்டு தொடக்கத்திலேயே சூரிய பகவான் மேஷ ராசியில் பயணம் செய்யப் போகின்றார். குரு பகவான் ரிஷப ராசியிலும், செவ்வாய் பகவான் கடக ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும், சந்திர பகவான் துலாம் ராசிகளும், சனி பகவான், சுக்கிர பகவான், புதன் பகவான், ராகு பகவான் ஆகிய நான்கு கிரகங்களும் மீன ராசியிலும் பயணம் செய்வார்கள்.

Canva

மகர ராசி: விசுவாவசு தமிழ் புத்தாண்டு உங்களுக்கு ஒரு சிறந்த காலமாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் சிக்கல் தீரும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு முதல் உங்களுக்கு ஏழரை சனியிலிருந்து விடுதலை கிடைக்கும் என கூறப்படுகிறது. 

Canva

தனுசு ராசி: விசுவாவசு தமிழ் புத்தாண்டு உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவானின் ஏழாம் பார்வையால் உங்களுக்கு அனைத்து சிரமங்களும் விலகும் எனக் கூறப்படுகிறது. பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

Canva

கன்னி ராசி: இந்த விசுவாவசு தமிழ் புத்தாண்டு கிரக அமைப்பு உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. அதன் காரணமாக சனி பகவானின் ஆசிர்வாதம் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல்கள் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் அதன் நிபுணர்களை அணுகவும்.

Canva

நெய் ஏன் பயன்படுத்த வேண்டும் தெரியுமா..! இந்த 6 காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

image credit to unsplash