பிரபல நடிகரான விஷ்ணு விஷால், இன்று தன்னுடைய கல்யாண நாளை கொண்டாடி இருக்கிறார். இந்த நிலையில் அவரது இரண்டாவது காதல் குறித்து பார்க்கலாம்
By Kalyani Pandiyan S Apr 22, 2024
Hindustan Times Tamil
“உண்மையில் நான் என்னுடைய வாழ்க்கையில் மீண்டும் கல்யாணம் செய்து கொள்வேன் என்று நினைத்து கூட பார்க்க வில்லை. இனிமேல் நம்முடைய வாழ்க்கை தனியாகத்தான் இருக்கப் போகிறது என்று நான் முடிவே செய்து விட்டேன்.”
அப்போதுதான் நான் ஜுவாலாவை சந்தித்தேன். மிகவும் பாசிட்டிவான அவர் என்னுடன் பழக ஆரம்பித்தார். பழக ஆரம்பிக்கும் பொழுதே அவரிடம் நான், ஏன் என்னுடன் பழகுகிறாய். எனக்கு ஒரு மகன் இருக்கிறான். நான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை என்பதை தெளிவாகச் சொன்னேன். ஆனால் அவரோ என்னை மிகவும் பிடித்திருக்கிறது என்று சொன்னார்.
அப்போதுதான் எனக்கு ஒரு ஸ்பார்க் வந்தது. அது நம்முடைய பிரச்சினைகளை காரணம் காட்டி, மற்றவர்களின் ஆசைகளை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பது. அவரும் ஒரு விவாகரத்தான பெண்மணிதான்.
அவருக்கும் மீண்டும் நாம் ஒரு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையெல்லாம் இருந்தது. எனக்கு ஜுவாலாவின் மென்மைத்தன்மையானது மிகவும் பிடித்திருந்தது. இதனையடுத்து தான் நாம் ஏன் நம்முடைய முடிவை மாற்றிக் கொள்ளக் கூடாது என்று யோசித்தேன்” என்று பேசினார்.
டிசம்பர் 09-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்