விபாசனா தியான முறை அறிந்ததும் அறியாததும்!

By Marimuthu M
May 09, 2024

Hindustan Times
Tamil

விபாசனா என்ற சொல்லுக்கு 'உள்ளதை உள்ளபடி பார்த்தல்' என்று பொருள்

’விபாசனா’ புத்த தர்மத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். 

விபாசனா தியானமுறை, உங்களை மையப்படுத்துதல், கவனம் செலுத்துதல், உங்கள் சுயத்தைப் பற்றி அறிதல் ஆகியவற்றுக்கு உதவுகிறது. 

விபாசனா தியானமுறையின் போது யாரும் யாருடனும் பேசுவதில்லை. 

விபாசனா தியானமுறையின்போது மிக அவசியம் ஏற்படும்போது மட்டும்  குறைந்த சத்தத்தில் பேச அனுமதிக்கப் படுகின்றனர்.

பத்மாசன முறையில் அமர்ந்து உங்கள் சுவாசத்தை, வயிற்றுப்பகுதியில் நடப்பதை கவனியுங்கள்.

 ஒருவரின் கண்களைக் கூட நாம் நேரடியாகப் பார்க்கக் கூடாது. 

விபாசனா செய்யும் ஒருவரால் கவனச்சிதறல் இன்றி செயல்படமுடியும். மன அழுத்தம் நீங்கும். பொறுமை, வலுவான மனநிலை அதிகரிக்கும்.

விபாசனா பயிற்சி 10 நாட்கள் வழங்கப்படுகிறது. இந்த தியான முயற்சியின்போது நாம் எதற்கும் பணம் செலுத்த தேவையில்லை. இதில் பலன்பெற்றவர்கள் இப்பயிற்சிக்குப் பின் நன்கொடையாளர் ஆகின்றனர். 

இதில் பயிற்சி பெற Vipassana Meditation Centre என இணையத்தில் தேடினால் முழுத்தகவல்கள் கிடைக்கும்.

கொத்தமல்லி விதையின் ஆரோக்கிய நன்மைகள் இதோ!