மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72-வது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் கடந்த ஆண்டு காலமானார். அவர் இறந்த செய்தி அனைவரையும் கண் கலங்க வைத்துவிட்டது என்று சொல்லலாம். 

By Kalyani Pandiyan S
Aug 25, 2024

Hindustan Times
Tamil

அவரது நோய்மை காலங்களில் அவருக்கு உறுதுணையாக இருந்து பார்த்துக் கொண்டது அவருடைய மனைவி பிரேமலதா என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்னதாக விஜயகாந்த் கேப்டன் சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னுடைய மனைவி பற்றியும் தன்னுடைய குழந்தைகள் பற்றியும் மனம் திறந்து பேசி இருந்தார். அந்த பேட்டி இங்கே

அம்மாவின் அன்பு அவர் பேசும்போது," எனக்கு பள்ளி பருவத்தில் இருந்தே அம்மாவின் அன்பு கிடைத்ததே கிடையாது. அப்பா அன்பாக இருப்பார். ஆனால் அவரை அடிக்கடி பார்க்க முடியாது. அதையெல்லாம் நான் பார்த்துவிட்டு, இன்று நான் என் பிள்ளைகளை பார்க்கும் பொழுது, அவர்களுக்கு அம்மாவின் அன்பு அதிகமாக கிடைப்பது தெரிகிறது. அதை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது

என்னுடைய மனைவி எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று சொல்வேன். எல்லோரும் கணவன் தான் கண் கண்ட தெய்வம் என்று சொல்வார்கள். ஆனால் என்னை பொருத்தவரை, எனக்கு மனைவி தான் எனக்கு கண் கண்ட தெய்வம். என்னையும் என்னுடைய குழந்தைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்வது அவர்தான். நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

கண்பட்டு விடும் சில வருடங்களுக்கு முன்பெல்லாம் என்னுடைய மகன்கள் சரியாக படிக்க வில்லை என்றால், அவர்களை போட்டு வெளுத்து விடுவேன். அப்போது என்னுடைய மனைவி ஒரு வார்த்தை சொன்னார். நீங்கள் ஷூட்டிங் இருக்கிறது என்று கூறி, அடிக்கடி சென்று விடுகிறீர்கள்; அப்படி இருக்கும் பட்சத்தில், வீட்டில் இருக்கும் பொழுது குழந்தைகளை அடித்தால் அது சரியாக இருக்குமா என்று கேட்டார். அதன் பின்னர் அவர்களை அடிப்பதை அப்படியே நிறுத்தி விட்டேன். உண்மையில் குழந்தைகள் பிறந்து ஆறு ஏழு வயது ஆகும் வரை, அவர் உடன் இருக்கும் காலங்களை மறக்கவே முடியாது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.

சந்தோஷமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம். இதை பொதுவெளியில் சொன்னால், பிரேமலதா தயவு செய்து யாராவது கண் பட்டுவிடும் அப்படி சொல்லாதீர்கள் என்று சொல்வார். ஆனால், என்னை பொருத்தவரை இது மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று சொல்கிறேன்.” என்று பேசி இருந்தார்.

அளவாக முட்டை சாப்பிட வேண்டும்