அடி தூள்! 6ம் இடத்தில் 3 கிரக சேர்க்கை! விபரீத ராஜயோகம் பெறும் மகரம்! இனி எல்லாமே வெற்றிதான்!

By Kathiravan V
Jun 13, 2024

Hindustan Times
Tamil

வரும் ஜூன் 15ஆம் தேதி அதிகாலை சூரிய பகவான் மிதுனம் ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இதன் மூலம் சூரியன் உடன் புதன், சுக்கிரன் சேர்க்கை ஏற்படும்.

மகர ராசிக்கு 6ஆம் இடமாக உள்ள மிதுனம் ராசியின் அதிபதியாக புதன் பகவான் உள்ளார். மறைவு ஸ்தானம் ஆன 6ஆம் இடம் உள்ளது. வியாபாரம், தொழிலில் மகரத்திற்கு பாக்கியம், புகழை அள்ளித்தரும் இடமாக  புதன் பகவான் உள்ளார். 

இந்த மூன்று கிரக சேர்க்கை வெற்றிகளை அள்ளித்தர போகிறது. உங்கள் முயற்சி ஸ்தானத்தில் இருக்கும் ராகு பகவான் மற்றும் புதன், சூரியன், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் கூட்டணி மிகப்பெரிய வெற்றிகளை கிடைக்க செய்யும். 

மகரம் ராசிக்கு 2ஆம் இடமான சனி பகவான் மூலத்திரிகோணத்தில் ஆட்சி பெற்று உள்ளார். பாத சனி உள்ள நிலையில் பேச்சில் மிக கவனமாக மகரம் ராசிக்காரர்கள் இருக்க வேண்டியது அவசியம்

உங்களுக்கு 5, 8 மற்றும் 10 ஆம் இடத்தின் அதிபதி 6ஆம் இடத்தில் உள்ளார். 8ஆம் இடத்திற்கு உரியவர் யோககாரகன் சுக்கிரன் உடன் இணைந்து இருப்பது விபரீத ராஜயோகத்தை உண்டாக்கி தரும்.

ஜூன் 15ஆம் தேதி முதல் புதிய செயல்களை தொடங்குவது, வெற்றிக்கான முயற்சிகளை ஒழுக்கத்துடன் எடுப்பது உள்ளிட்ட செயல்பாடுகள் வெற்றிகளை தேடி தரும்.

கர்நாடக வேலை கன்னடர்களுக்கே! மசோதாவை நிறுத்தி வைத்த சித்தராமையா! நடந்தது என்ன? இதோ முழுவிவரம்!