பாலா குறித்து வேதிகா பிரத்யேகமாக நமக்கு பேட்டியளித்தார்.
By Kalyani Pandiyan S Jan 07, 2025
Hindustan Times Tamil
நான் பாலா சாருக்கு நன்றி சொல்லணும். காரணம், எனக்கு அவர் பரதேசி படம் கொடுத்தார்.
அந்தப்படத்துக்கு அப்புறம்தான் காவியத்தலைவன் படம் பண்ணேன்.
காஞ்சானால காமெடி ரோல் பண்ணேன். வேற மொழிகள்லையும் நடிக்க வாய்ப்பு கிடைச்சிச்சு.
தெலுங்குலையும் என்னோட நடிப்ப வெளிப்படுத்துற மாதிரியான ரோல்ஸ் வந்துகிட்டு இருக்கு. பாலா சார் 25 வருடங்கள சினிமா துறையில நிறைவு செஞ்சிருக்கார். ரொம்ப சந்தோஷமா இருக்கு.
நீங்க ஒரு நடிகரா இருந்தீங்கன்னா உங்களோட மிகப்பெரிய பலமா ஆக்டிங்கா இருக்கணும். படம் ஹிட் ஆகலாம் அல்லது ஃப்ளாப் ஆகலாம்.
ஆனா உங்க ஆக்டிங் ஃபவுண்டேஷன் எப்போதுமே ஸ்ராங்கா இருக்கணும். அது இருந்தாலே, நீங்க இந்த துறையில நீண்ட காலம் இருக்க முடியும். ' என்றார்.