நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் 40க்கு 40 இடங்கள் கிடைத்த போதும் பெரிதான பயனில்லை என்ற கருத்து முன்வைக்கப்படுவது குறித்து விசிகவைச் சேர்ந்த ஆதவ் அர்ஜூனா கலாட்டா வாய்ஸ் சேனலுக்கு பேட்டிக்கொடுத்திருக்கிறார்.
By Kalyani Pandiyan S Jun 10, 2024
Hindustan Times Tamil
40க்கு 40 தொகுதிகளில் வென்றும் என்ன பயன் என்று கேட்கிறார்கள். உண்மையில் எதிர்க்கட்சியானது மிகச் சரியாக பணியாற்றினால், ஆளுங்கட்சி கிட்டத்தட்ட 90 சதவீதம் ஒழுங்கான ஆட்சியை கொடுக்கும். அல்லது, ஆட்சியை நடத்த விடாமலே செய்யலாம். முன்னதாக, மோடியின் பிம்பத்தை உலக அளவில் உடைக்கவே முடியாது என்று மார்க்கெட்டிங் செய்யப்பட்டது. ஆனால் இப்போது மோடியின் பிம்பம் உடைந்து விட்டது என்று நியூயார்க் டைம்ஸ் செய்திதாள் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
அந்த செய்தித்தாள் மட்டுமில்லை, இதர இணையதளங்களும் அதேபோன்று கருத்தை முன்வைக்கின்றன. கடந்த பத்து வருடங்களாக மீடியாக்கள் அனைத்தும் மோடி என்ற ஒருவர் சொல்வதை மட்டுமே எழுதிக் கொண்டிருந்தன. இது எதைச் சொல்கிறது என்றால், எதிர்க்கட்சியானது வலிமை ஆகிவிட்டது என்பதை குறிக்கிறது.
தற்போது எங்களுடைய கோரிக்கை என்னவென்றால், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் அதிதீவிரமாக செயல்பட வேண்டும். கடந்த பத்து வருடங்களாக அவர் சந்தித்த வலிகள் அவரை ஒரு போராளியாக மாற்றி இருக்கிறது. அவரை நிறைய பக்குவப்படுத்தி இருக்கிறது.
நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் சில சூழ்நிலைகள் காரணமாக பாஜகவுடன் கூட்டணி வைத்தார்கள். ஆனால் சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரசாரத்தில் கூட பாஜகவின் புகைப்படத்தை பயன்படுத்தவில்லை. ஆகையால் இனி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவெல்லாம் எங்கே செல்கிறது என்றே தெரியாது.
Enter text Here
நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் சமூகநீதிக்கு ஆதரவானவர்கள். ஆகையால் அவர்கள் நம் கூட்டணியில் இல்லை என்றாலும், நம் சார்பாக மோடியின் அரசாங்கத்திலிருந்து வேலைகளை செய்வார்கள்” என்று பேசினார்.