உங்கள் வீட்டின் சுவரில் கடிகாரம் இப்படி இருந்தால் தரித்திரம் உறுதி! எச்சரிக்கும் வாஸ்து நிபுணர்கள்!
By Kathiravan V Sep 14, 2024
Hindustan Times Tamil
வாஸ்து சாஸ்திரம் என்பது இந்தியாவின் பாரம்பரிய கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு பற்றி விவரிக்கும் சாஸ்திரம் ஆக உள்ளது. ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் முறைகளை வேதம் சார்ந்து வாஸ்து விளக்குகின்றது.
வாஸ்து சாஸ்திரம் என்பது உடல் நலம், மன அமைதி, பொருளாதார வளர்ச்சி, சொத்து மதிப்பு அதிகரிப்பு ஆகியவற்றுக்கு வாஸ்து காரணமாக அமைகின்றது. வாஸ்து விதிகளை பின்பற்றுவது இந்து மதத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வாஸ்து சரியாக இருந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவி மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரும் என்பது நம்பிக்கை.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் சரியான திசையில் கடிகாரம் இருப்பது மிகவும் முக்கியம்.வீட்டில் கடிகாரம் சரியான திசையில் வைக்கப்படாவிட்டால், வாஸ்து குறைபாடு ஏற்படலாம். இதனால் நிதி, மன மற்றும் உடல் சார்ந்த பிரச்சினைகளை வீட்டில் உள்ளவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். நமது வீட்டில் சரியான திசையில் மற்றும் சரியான இடத்தில் வைக்கப்படும் கடிகாரம் நமது விதியை சரியான திசையில் கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, கிழக்கு திசையில் வைக்கப்படும் கடிகாரம் உங்கள் வீட்டில் மங்களம் மற்றும் செழிப்பை கொண்டு வரும் என்று நம்பப்படுகின்றது. வடக்கு திசையில் உள்ள கடிகாரமும் நல்ல பலன்களைத் தருகிறது.
எக்காரணம் கொண்டும் உங்கள் வீட்டில் உள்ள சுவர்களில் மேற்கு மற்றும் தெற்கு திசையில் கடிகாரத்தை வைக்க கூடாது. இந்த கடிகாரம் உங்களுக்கு மோசமான நேரங்களைக் கொண்டுவருகிறது மற்றும் வீடு மற்றும் அலுவலகத்தில் பிரச்சினைகளை அதிகரிக்கிறது என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு கடிகாரத்தை ஒருபோதும் கதவுக்கு மேலே வைக்கக்கூடாது. கதவுக்கு மேலே ஒரு கடிகாரத்தை வைப்பது மங்களகரமாக கருதப்படுவதில்லை.
வீட்டில் நின்று போன கடிகாரத்தை ஒருபோதும் வைத்திருக்க வேண்டாம். அதை எப்போதும் சரியான நேரத்தில் வைத்திருக்க வேண்டும்.
ஒரு போதும் வீட்டில் பழுது அடைந்த கடிகாரங்களை வைத்திருக்க வேண்டாம். வாஸ்து சாஸ்திரத்தின் படி, உடைந்த அல்லது பழுது அடைந்த கடிகாரத்தை சூழ்நிலையை கெடுக்கிறது. உடைந்த கடிகாரம் துரதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகின்றது. எனவே உங்கள் வீடில் கடிகாரம் உடைந்தால், அதை வீட்டிற்கு வெளியே எறியுங்கள்.
‘குளிகை நேரம் என்றால் என்ன? குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?’