வீட்டில் தென் மேற்கு திசை மிகவும் முக்கியமானதாமே. ஏன் அப்படி சொல்கிறாங்க பாருங்க
By Pandeeswari Gurusamy Apr 16, 2025
Hindustan Times Tamil
சாஸ்திரப்படி தென் மேற்கு திசையை குபேர மூலை, நிருதி மூலை, கன்னி மூலை என்றும் சொல்கிறார்கள். இந்த இடம் வீட்டில் மிகவும் முக்கியமானது.
வாஸ்து சாஸ்திரப்படி வாஸ்து பகவான் வடகிழக்கில் தலை வைத்து தென் மேற்கு திசையை நோக்கி கால்களை நீட்டி படுத்திருப்பதாக தெரிவிக்கிறது.
வாஸ்து பகவான் காலடியில் பூஜையறை அமைத்து அலங்காரம் செய்து கடவுள் வழிபாடு செய்து வந்தால் அமோகமாக பலன்கள் கிடைக்கும்.
அதேபோல் பணம், தங்க ஆபரணங்கள், முதலீட்டு பத்திரங்கள் ஆகியவற்றை வைத்திருக்கும் பீரோ அல்லது லாக்கர் இந்த இடத்தில் வருவது மிகவும் சிறப்பாக இருக்கும்.
பீரோ அல்லது லாக்கரை தென் மேற்கு திசையில் உள்ள அறையில் தெற்கு பகுதி சுவரை ஒட்டி வடக்கு பார்த்தவாறு அமைப்பதும் கிழக்கு பக்கமாக திறப்பது போல அமைப்பதும் சிறப்பு.
இந்த அறையில் தேவையற்ற பொருட்களை போட்டு வைப்பது வீட்டில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொல்கிறார்கள்.
பொதுவாக வடகிழக்கு திசையான ஈசான மூலையில் பூஜை அறை அமைக்க முடியாதவர்களுக்கு இந்த இடம் பூஜை அறை அமைக்க உகந்ததாக உள்ளது. இந்த இடத்தில் படுக்கை அறையும் அமைக்கலாம்.
பொதுவாக தென் மேற்கு திசையில் உள்ள கட்டிடப்பகுதி மற்ற பகுதிகளை விட உயரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தொட்டிகள் வைக்க உகந்த இடமாக உள்ளது.
தென் மேற்கு பகுதியில் மேற்கு திசையில் தென்னை, மூங்கில் போன்ற மிகவும் உயரமாக வளரக்கூடிய மரங்களை வைக்கலாமாம்.
பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.
கோடை காலத்தில் சில எளிய டிப்ஸ்களை பின்பற்ற சருமத்தில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். சருமத்தை பேனி காக்க உதவும் சில எளிய டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம்