’ஒரு கையில் பெரியார்! மறு கையில் பிள்ளையார்!’ வெளியானது வணங்கான் டீசர்!

By Kathiravan V
Feb 19, 2024

Hindustan Times
Tamil

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது

இந்தப் படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்து ஷூட்டிங்கும் விறுவிறுவென நடந்து வந்தது. 

ஆனால், சில காரணங்களால் ஷூட்டிங் தொடர்ந்து நடக்காமல் கைவிடப்பட்டு, சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் கதாநாயகனா இணைந்தார்

கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலையின் பிரம்மாண்டத்துடன் டீசர் தொடங்குகிறது.

தேவாலயத்தின் பின்னணியில், நெற்றி நிறைய விபூதி பட்டை குங்குமத்துடன் வேறுபட்டத் தோற்றத்தில் அருண் விஜய் தோன்றுகிறார்

சண்டைக்காட்சிகள் நிறைந்துள்ள இந்த திரைப்படத்தில், கிணற்றில் இருந்து ஒரு கையில் பெரியார், மறு கையில் பிள்ளையார் உடன் வரும் அருண் விஜயின் தோற்றம் பிரம்பிக்க வைக்கிறது

பால் வரவில்லை அல்லது போதவில்லை என்ற காரணத்தால் குழந்தை பிறந்தவுடன் பால் வாங்கி கொடுக்கும் போக்கு சமீப காலமாக அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.