சுந்தர் சி - வடிவேலு  கூட்டணியில்  “கேங்கர்ஸ்” படம் உருவாகி இருக்கிறது. 

By Kalyani Pandiyan S
Apr 17, 2025

Hindustan Times
Tamil

இப்படம் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி,  A.C.S  மருத்துவக் கல்லூரி விழாவில்,  கோலாகலமாக நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் வடிவேலு பேசும் போது, ‘முதலில் சுந்தர்  அண்ணன் சார்பிலும் என் சார்பிலும் ஏ சி சண்முகம் அய்யா அவர்களுக்கு நன்றி. 10 ஆயிரம் மாணவர்கள் முன்னிலையில் இப்பட விழா நடப்பது மகிழ்ச்சி. 

நானும் சுந்தர் சி அண்ணனும் 15 வருஷமா சேர வில்லை, நம்மூரில் பிரிச்சி வைக்க ஆளா இல்லை, இடையில் நாங்கள் பிரிந்திருந்தது பெரிதாகத் தெரியவில்லை. 

இந்தப்படம் ஏதோ நேற்று செய்த வின்னர் படம் மாதிரி, அத்தனை புதிதாக இருக்கிறது. சுந்தர் சி அண்ணனுக்கு சொல்லவா வேண்டும். ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து உருவாக்கியிருக்கிறார். 

பேசி முடிச்சு 35 நாளில் இப்படத்தை முடித்து விட்டோம். உங்களுக்குத் தேவையான அத்தனை தீனியும் படத்தில் இருக்கிறது. இது தியேட்டரில் எல்லோரும் சேர்ந்து பார்த்து கொண்டாட வேண்டிய படம். 

சுந்தர் சி அண்ணன் அருமையாக எடுத்துள்ளார், என்னிடம் என்ன வாங்க வேண்டும் என,  அவருக்கும் தெரியும் உங்கள் எல்லோருக்கும் கொண்டாட்டம் காத்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி.' என்று பேசினார். 

கவனம் மக்களே.. சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் எந்த 3 ராசிகளுக்கு பாதகம்!