வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தக்கூடிய கொசு விரட்டிகளை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Apr 14, 2024

Hindustan Times
Tamil

காது அருகே கொசுக்கள் சத்தமிட்டு, அது கடிப்பதால் சருமத்தில் வடுக்கல் ஏற்டுக்கின்றன. இதை அப்படியே விட்டுவிட்டால் மலேரியா, டெங்கு போன்ற நோய் பாதிப்புகளும் ஏற்படலாம் 

அடிப்படை எண்ணெய்கள்

ஈக்லபிடஸ்,சிட்ரோனெல்லா, லெமன் கிராஸ் எண்ணெய்கள் சிறந்த கொசு விரட்டியாக இருக்கின்றன. வழக்கமாக பயன்படுத்தும் எண்ணெய்யுடன் கலந்து இந்த எண்ணெய்யை சருமத்தில் தடவுதன் மூலம் கொசுக்களை விரட்டலாம். கொசு விரட்டிகளில் டிஃப்பியூசராகவும் இதை பயன்படுத்தலாம்

சிட்ரஸ் பழங்கள்

எலுமிச்சை பழங்களில் இருக்கும் இயற்கையான சேர்மானங்கள் கொசுக்களுக்கு அசெளகரியத்தை தரும். எலுமிச்சை தோல்களை சருமத்தில் தடவுவது அல்லது எலுமிச்சை சார்ந்த ஸ்ப்ரேக்கள் கொசுக்களை நன்கு விரட்டும் 

பூண்டு தண்ணீர்

பூண்டில் இருக்கும் கந்தக சேர்மானம் கொசுக்களை விரட்டும் தன்மை கொண்டிருக்கிறது. எனவே பூண்டு சாறுகளை கொசுக்கள் அதிகமாக இருக்கும் பகுதியில் ஸ்ப்ரே செய்வதன் மூலம், சருமத்தில் தேய்ப்பதன் மூலம் கொசு கடிகளில் இருந்து தப்பிக்கலாம்

வேம்பு எண்ணெய்

வேம்பு இலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் வேம்பு எண்ணெய் சக்தி வாய்ந்த பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. வழக்கமான எண்ணெய்யுடன் இதை கலந்து ஸ்ப்ரே செய்வதன் மூலம் கொசுக்கள் விரட்டப்படும்

துளசி இலைகள்

துளசி இலைகளில் கொசுவை விரட்டும் பண்புகள் உள்ளன. துளசி இலைகளை நசுக்கி சருமத்தில் தேய்த்தலோ அல்லது கொசு அதிகமாக இருக்கும் பகுதிகளில் வைப்பதன் மூலம் கொசுக்களை விரட்டலாம்

மே 28-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்