தலைமுடி நீளமாகவும், ஆரோக்கியமாக இருக்க சில பொருள்களை தவறாமல் பயன்படுத்த வேண்டும்

By Muthu Vinayagam Kosalairaman
Jun 10, 2023

Hindustan Times
Tamil

நீளமான தலைமுடியை பெறவும், முடியின் ஆரோக்கியத்தை பேனி காக்கவும் உதவும் பொருள்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

தேங்காய் எண்ணெய் தலைமுடியின் வேர் பகுதியை விடுத்து மற்ற பகுதிகளில் தேய்க்க வேண்டும்

தேங்காய் எண்ணெய் தேய்த்த பின்னர் சுமார் 30 நிமிடம் வரை ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் தண்ணீர் அல்லது ஷாம்பூ வைத்து கழுவ வேண்டும்

கற்றாழை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய தாவரமாக உள்ளது. அவை தலைமுடிக்கும் குளிர்ச்சி, ஊட்டம் தந்த அடர்த்தியாக வளரவும், முடியை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது

கற்றாழை இலையில் இருந்து அதன் ஜெல் எடுத்து, தலைமுடியில் நன்கு தேய்த்து கொள்ளவும். சுமார் அரை மணி நேரம் ஊற வைத்த பின்னர் தண்ணீரால் முடியை கழுவ வேண்டும்

வாழைப்பழத்தில் தலைமுடியை ஆரோக்கியமான வைக்கும் தன்மை இருப்பது பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை

ஈரப்பதம் மிக்க தலைமுடியில்  வாழைப்பழத்தை நன்கு மசித்து தேய்த்த பின்னர் 20 முதல் 30 நிமிடம் வரை அப்படியே விட்டு விட வேண்டும்.  பின்னர் வெதுவெதுப்பான நீர் அல்லது ஷாம்பு வைத்து கழுவ வேண்டும்

அனைவரும் விரும்பி சாப்பிடும் முட்டையில் தலைமுடியை ஊட்டமளிக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன

ஒரு பவுலில் இரண்டு முட்டைகளை உடைத்து அதை  நன்கு கலக்கிய பின் தலைமுடியில் தேய்த்து 20 நிமிடம் காய வைக்க வேண்டும். பின் தண்ணீர் அல்லது லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியை கழுவ வேண்டும்

தலைமுடியில் தேன் தேய்க்கூடாது என்று பலரும் கூறுவதுண்டு. ஆனால் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து தலைமுடியில் தேய்த்த பின் அரை மணி நேரம் கழித்து கழுவினால் கூந்தல் ஆரோக்கியம் பெறும்

 ’சூரியனின் ராஜகுணம் அப்படியே இருக்கும்!’ உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!