விரைவில் மத்திய பட்ஜெட்! அல்வா கிண்டினார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்! பட்ஜெட் ரகசியம் தெரியுமா?

By Kathiravan V
Jul 16, 2024

Hindustan Times
Tamil

மூன்றாவது முறையாக பொறுப்பேற்று உள்ள மோடி அரசின் பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மத்திய பட்ஜெட் 2024-25 தயாரிப்பதற்கான இறுதி கட்டத்தை குறிக்கும் பாரம்பரிய 'அல்வா தயாரிக்கும்' விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். 

லோக்சபாவில் வரும் ஜூலை 23 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, ஆவணம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிதியமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ’அல்வா’ தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

டெல்லியில் நிதியமைச்சகம் உள்ள நார்த் பிளாக்கின் அடித்தளத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் மற்றும் பிற உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிதியமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த விழா ஒரு பிரிவு உபசார விழாவை போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

பட்ஜெட் உரை தயாரிப்பு பணிகளுக்கு முன்பு இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. பட்ஜெட்டில் உள்ள தகவல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், ரகசியம் காக்கப்படுகின்றது

பட்ஜெட் உரையை தயாரிப்பதற்கான பணிக்காகவும், அதன் ரகசியம் காக்கவும் நார்த் பிளாக் கட்டடத்தில் உள்ள அடித்தளத்தில் நிதியமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்குவது வழக்கம்.

மக்களவையில் நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையை முடித்த பிறகுதான் அதிகாரிகள் அந்த கட்டடத்தில் இருந்து வெளியே வருகிறார்கள். நார்த் பிளாக்கின் அடித்தளத்தில் 1980 முதல் 2020 வரை 40 ஆண்டுகளாக பட்ஜெட் ஆவணங்களை அச்சிடுவதற்கு பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு அச்சகம் உள்ளது, அதன் பிறகு பட்ஜெட் டிஜிட்டல் ஆனது. இதன் காரணமாக, லாக்-இன் காலம் இரண்டு வாரங்கள் வரை நீடித்த முந்தைய காலத்திலிருந்து வெறும் ஐந்து நாட்களாகக் குறைந்துள்ளது.(ANI/PIB)

அமைதியான தூக்கம் வேண்டுமா? இந்த டிப்ஸ்களை தெரிஞ்சிக்கோங்க!

image credit to unsplash