’மேஷம் முதல் மீனம் வரை!’ மன்னரையே ஆட்டிப்படைக்க வைக்கும் பாரிஜாத யோகம் யாருக்கு?
By Kathiravan V Jun 16, 2024
Hindustan Times Tamil
பாரிஜாத மலரை போல் மிக அபூர்வமானது என்பதால், இதற்கு பாரிஜாத யோகம் என்று அழைக்கப்படுகின்றது. பாரிஜாத மலர் என்பது இந்திர லோகத்தில் இருக்கும் வாடாத அபூர்வ மலர் ஆகும்.
மன்னர்களும் தலை வணங்கும் நிலைக்கு ஜாதகரை கொண்டுபோய்விடும் ஆற்றலை இந்த பாரிஜாத யோகம் தருகிறது. மதம், இனம் சார்ந்து செயல்படுபவர்களுக்கு மாபெரும் வெற்றியை தரும் யோகமாக உள்ளது.
உங்கள் லக்னாதிபதி எந்த வீட்டில் அமர்ந்து இருக்கிறாரோ, அந்த வீட்டு அதிபதி இருக்கும் வீட்டின் அதிபதி ஆட்சியாகவோ உச்சமாகவோ இருக்க வேண்டும்.
மன்னருக்கு மன்னவரும் தலைவணங்கும் அமைப்பு, தான் சார்ந்த இயக்கத்தில் உயர்நிலை பெறுதல், சமுதாயத்தை கட்டிக்காகும் தலைவர்களை உருவாக்குவது, பேச்சில் அதிகாரம், இறைவனுக்கு அடுத்த நிலையில் வணங்கத்தக்க இடம் உள்ளிட்ட அம்சங்களை ஜாதகர் பெறுவார்.
உதாரணமாக, சிம்ம லக்ன ஜாதகத்தை எடுத்துக் கொள்வோம். சிம்ம லக்னத்தின் அதிபதியான சூரிய பகவான் கடகராசியில் உள்ளார் எனில், கடகராசி அதிபதியான சந்திரன், துலாம் ராசியில் இருக்கிறார் என்று வைத்துக் கொண்டால், துலாம் ராசிக்கு உடைய சுக்கிர பகவான் மீனம் ராசியில் உச்சம் பெற்றால் இது பாரிஜாத யோகமாக கணிக்கப்படுகின்றது.
லக்னத்திற்கு 11ஆம் அதிபதி என சொல்லக்கூடிய லாபாதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால் இரண்டாம் நிலை பாரி ஜாத யோகம் உண்டாகிறது. உதாரணமாக, சிம்ம லக்னக்காரர்களுக்கு 11ஆம் அதிபதியான புதன் உச்சம் பெற்று இருந்தால் இரண்டாம் நிலை பாரிஜாத யோகம் உண்டாகும். புதனின் காரகத்துவம் ஆன சொல்வாக்கால் செல்வாக்கு பெற்று செல்வம், புகழ் சேர்ப்பீர்கள்.