’மேஷம் முதல் மீனம் வரை!’ புகழை கொடுக்கும் செலிபிரட்டி ஆக்கும் சுப வேசி யோகம் யாருக்கு?
By Kathiravan V Jun 12, 2024
Hindustan Times Tamil
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், ஜோதி யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் உள்ளன.
புகழ் என்றாலே அது சூரியனை குறிக்கும். ஒரு மனிதனை வெளிச்சம் போட்டு காட்டக்கூடிய கிரகமாக சூரியன் உள்ளது. சூரியன் மூலம் கிடைக்கும் யோகங்களில் ஒன்றாக இந்த வேசி யோகம் உள்ளது. ஒருவரது ஜாதகத்தில் ஆத்மகாரகன், சம்பாத்யகாரகனாக சூரிய பகவான் விளங்குகிறார்.
ஜாதகத்தில் சூரியன் அமர்ந்த வீட்டுக்கு அடுத்த வீட்டில் சுபகிரகங்கள் அமர பெறுவது சுபவேசி யோகம் என குறிக்கப்படுகிறது. இந்த சுபகிரகங்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் சந்திரன் இருப்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
உதரணமாக மேஷம் ராசியில் சூரியன் உள்ளபோது உச்சம் பெறுகிறார். அவ்வாறு உச்சம் பெற்ற சூரியனுக்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று இருந்தால் அது சுப வேசி யோகம் என அழைக்கப்படுகின்றது.
வேசி யோகம் அமைந்தால் ஒருவர் இரவா புகழை அடைகிறார். எந்த துறையை எடுத்தாலும், அதில் சாதனையாளராக வரக்கூடியவர்களாக இந்த ஜாதகர்கள் இருப்பார்கள். சமுதாயத்தில் அந்தஸ்து, சமுதாயத்திற்கு நன்மைகள் செய்யும் புகழ்பெற்ற நபர்களாக இவர்கள் இருப்பார்கள்.
சமுதாயத்தில் அந்தஸ்து, சமுதாயத்திற்கு நன்மைகள் செய்யும் புகழ்பெற்ற நபர்களாக இவர்கள் இருப்பார்கள்.
அமைதியான தூக்கம் வேண்டுமா? இந்த டிப்ஸ்களை தெரிஞ்சிக்கோங்க!