’மேஷம் முதல் மீனம் வரை!’ நீச பங்க ராஜயோகம் என்றால் என்ன? நீசம் பெற்ற கிரகம் என்ன செய்யும்?

By Kathiravan V
Sep 18, 2024

Hindustan Times
Tamil

ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், ஜோதி யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் உள்ளன. அந்த வகையில் நீச பங்க ராஜயோகம் குறித்து தற்போது பார்க்கலாம்.

நீசம் என்பது ஒரு கிரகம் முழுமையாக வலு இழந்துவிட்டது என்று பொருள் ஆகும். ஒரு கிரகத்தின் ஒளித்தன்மையை முழுமையாக இழந்துவிட்டது என்றும் பொருள்படும். 

சந்திரனை பொறுத்தவரை விருச்சிகம் ராசியில் அவர் நீசம் அடைந்தாலும், அமாவாசை காலத்தில் நீசம் அடைந்துவிட்டதாகவே பொருள்படும். ஏனெனில் அந்த நாளில் அவர் முழு ஒளித்தன்மையை இழப்பார். 

ஒரு கிரகம் உச்சம் அடைந்து இருக்கும் போது உச்ச ஒளி பொருந்திய தன்மை உடன் இருக்கும். ஆனால் நீசம் பெற்றால் அதன் ஒளித் தன்மையை இழந்துவிடும். நீச்சத்திற்கு பங்கம் கிடைத்து அதுவே யோகமாக மாறுறது. நீசம் பெற்ற கிரகம் இழந்த ஒளியை வேறு ஒரு ஒளி பொருந்திய கிரகத்தின் மூலமாக அல்லது வீடு கொடுத்தவரின் மூலமாக அல்லது அல்லது வக்கரம் அடைவதன் மூலமாக அல்லது வர்க்கோத்தமம் அடைவதன் மூலமாக திரும்ப பெறுவதே நீச பங்கம் எனப்படும். 

மூன்று நான்கு கிரகங்கள் நீச்சம் அடைந்திருந்தாலும் சூரிய சந்திரன் போன்ற ஒளிபொருந்திய கிரகங்கள் யாரேனும் ஒருவர் உச்சம் பெற்றோ ஆட்சி பெற்றோ இருந்துவிட்டால் அனைத்து கிரகங்களுக்கும் நீச்சபங்கம் கிடைத்துவிடும்.

நீசம் என்பது ஒரு நிலை. நீசபங்கம் என்பது இன்னொரு நிலை. நீசபங்க ராஜயோகம் என்பது மூன்றாவது நிலை. ஒரு நீச்சம் பங்கம் ராஜயோகம் பெற்ற கிரகம் என்ன செய்யும் என்று தற்போது பார்க்கலாம். 

உதாரணமாக சனி பகவான் மேஷத்தில் நீசம் அவர் நீச்சம் அடைந்து விடுகிறார். இவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் மகரத்தில் உச்சம். என்றால் சனியும் செவ்வாயும் பரிவர்த்தனை ஏற்பட்டு நீசபங்கம் கிடைக்கும். இது ராஜயோகத்தில் சேராது. 

’மேஷம் முதல் மீனம் வரை!’ நீச பங்க ராஜயோகம் என்றால் என்ன? நீசம் பெற்ற கிரகம் என்ன செய்யும்?

’மேஷம் முதல் மீனம் வரை!’ நீச பங்க ராஜயோகம் என்றால் என்ன? நீசம் பெற்ற கிரகம் என்ன செய்யும்?

ஆனால் சுக்கிரன் துலாம் ராசியில் இருந்து ஆட்சி பெற்றபடி சனி பகவானை பார்த்தால் நீசபங்க ராஜயோகம் ஏற்படும். குருபகவான் தனுசு ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் சனியை பார்த்துட்டு இருக்கார் எனும் போதும் நீச பங்க ராஜயோகம் ஏற்படும். 

நீச பங்க ராஜயோகம் பெற்ற கிரகம் ஆனது தனது ஆதிபத்திய காரகத்துவ விசேஷங்களை ஆரம்ப காலகட்டத்தில் உங்களுக்கு தராமல் தடைகள் செய்து பிறகு மிகப்பெரிய விஷேஷங்களை தரும் என்பதே நீச்சபங்க ராஜயோகத்தின் சூட்சம் ஆகும். 

கண்ணாடி தொடர்பான வாஸ்து குறிப்புகள்