திருமணத்துக்கு முன் இதைப் புரிஞ்சுக்கங்க!

By Marimuthu M
Apr 16, 2024

Hindustan Times
Tamil

திருமணத்துக்கு முன், உங்கள் வருங்கால துணையின் கனவுகள் மற்றும் இலக்குகளைத் தெரிந்து கொள்ளுங்கள். 

திருமணத்துக்கு முன், ஒவ்வொருவரும் எந்த மாதிரியான பணி செய்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சிலருக்கு ஊர் ஊராகச் செல்லும்பணி, சிலருக்கு அலுவலகப் பணி என பணியின் தன்மை இருப்பதை இருவரும் புரிந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

திருமண வாழ்வில் உறவுகளில் சவால்கள் வரும் என்பதையும், அதை சமாளிக்கும் மனப் பக்குவத்தையும் முன்னரே பெற்றுக்கொள்ள வேண்டும்.

திருமணத்துக்கு முன்பு பெண் பார்க்கும் படலத்தின் போதே, ஒருவருக்கு ஒருவர், தங்களது இயல்புடன் பேசி,தங்களது சுபாவங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டும். அதில் உடன்பட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்வது நல்லது. இல்லையேல், வேண்டாம்.

திருமணத்துக்கு முன், இரண்டு குடும்பங்களுக்கு இடையே வேற்றுமை இருந்தாலும், திருமணம் செய்யும் நபர்களுக்கு இடையே ஒற்றுமை இருக்கவேண்டும். அப்போதுதான் வாழ்வு இனிக்கும்.

திருமணத்துக்கு முன், திருமணம் செய்துகொள்ளும் நபர்களின் வரவு, செலவு செய்யும் திறனை ஒருவருக்கொருவர் அறிந்துகொள்ள வேண்டும். 

திருமணத்துக்கு முன், சிக்கல்கள் வந்தால் எப்படி கையாள்வது என்பதையும், ஒருவருக்கொருவர் சமரசம் செய்வது குறித்தும் பேசி வைத்துக் கொள்வது நல்லது. 

 ’மேஷம் முதல் மீனம் வரை!’ புதன் கிரகம் நீசம் அடைவதால் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள்!