சென்னையில் உள்ள பனையூர் தவெக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை இன்று வழங்கினார்.
By Suguna Devi P Dec 03, 2024
Hindustan Times Tamil
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு செல்லாமல் அவரது இடத்திற்கு அழைத்து நிவாரணப் பொருட்களை அளித்ததற்கு நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 250 குடுமபத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தினர் விளக்கமளித்துள்ளனர். அதில் விஜய் ஒரு பிரபலமான நடிகராக இருப்பதால், தற்போதைய சூழலில் அவர் களத்திற்கு சென்றால் பெரும் கூட்ட நெரிசல், தேவையற்ற விபரீதங்கள் எழக்கூடும் என்ற காரணத்தினால் தான் அவர் தனது பனையூர் வீட்டில் வைத்து நிவாரண உதவிகளை அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பனையூருக்கு வந்த அனைவரிடமும் நிதானமாக அமர்ந்து பேசி அவர்களின் பிரச்சனைகளை கேட்டுக் கொண்டார்.
முன்னதாக திருவண்ணாமலை நிலச்சரிவில் இறந்த 7 பேரின் மரணத்திற்கு அதிர்ச்சியடைந்ததாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இருப்பினும் விஜய் பாதிக்கப்பட்ட இடத்திற்கு செல்லாமல் இருப்பது நல்லதல்ல என பல விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது அவரது அரசியல் பயணத்திற்கு நல்லதல்ல எனவும் தெரிவித்து வருகின்றனர்.