ஊற வைத்த பாதாமை உட்கொள்வது உடலுக்கு நல்லதா? உண்மை என்ன?ஆய்வில் வெளி வந்த அதிர்ச்சி தகவல்!

By Kathiravan V
Jul 18, 2024

Hindustan Times
Tamil

பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிடுவது நன்மையா அல்லது ஊற வைக்காமல் அப்படியே சாப்பிடுவது நன்மையா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருந்து வருகின்றது. 

இரவில் தண்ணீரில் பாதாமை ஊற வைத்துவிட்டு மறுநாள் காலையில் தண்ணீரை வடிய வைத்துவிட்டு ஊறிய பாதாமை பலர் உட்கொள்கின்றனர். இவ்வாறு ஊற வைத்து தண்ணீரை வடிக்கட்டிய பின்னர் சாப்பிடுவதால் பாதாம் பருப்பில் அடங்கி உள்ள ‘பைட்டிக் ஆசிட்’ எனப்படும் வேதி பொருள் இல்லாமல் போகும் என்பது பலரின் கருத்தாக உள்ளது. 

பாதாம் பருப்பில் உள்ள நல்ல சத்துக்களை உடல் கிரகிக்க விடாமல் தடுக்கும் வேதி பொருளாக இந்த பைட்டிக் ஆசிட் உள்ளது. பல உணவுகளில் நியூட்டிரியன்ஸ் இருப்பது போலவே ஆண்டி நியூட்டிரியன்ஸ்களும் இருப்பது இயற்கை நியதி.

பாதாம் பருப்பு குறித்து ’யூரோப்பியன் ஜர்னல் ஆப் கிளினிக்கல் நியூட்ரீஷன்’ அமைப்பு இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளது. (Freepik)

இதன்படி, முழு பாதாம் பருப்பை அப்படியே கொடுத்தும், முழு பாதாமை ஊற வைத்தும், ஊற வைக்காமலும், பாதமை துண்டு துண்டாக வெட்டி ஊற வைத்தும் பலருக்கு கொடுத்து இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில், 100 கிராம் ஊற வைக்காத முழு பாதாமை அரைத்து ஆய்வு செய்ததில் 551 மில்லி கிராம் பைட்டிக் ஆசிட் இருந்து உள்ளது. ஊற வைத்து உலர வைத்த 100 கிராம் பாதாமில் பைட்டிக் ஆசிட்-இன் அளவு 30 சதவீதம் அதிகரித்து 563 மில்லி கிராம் ஆக அதிகரித்து உள்ளது.

வெட்டி ஊற வைக்கப்பட்ட பாதாமில் பைட்டிக் ஆசிட் 548 மில்லி கிராம் ஆக அதிகரித்து உள்ளது. பாதாமை ஊற வைத்து உலர்த்தும் போது, நீர்த்தன்மை குறைந்து அதில் உள்ள நியூட்டீயன்ஸ்களின் அடர்த்தி அதிகம் ஆவதாக இந்த ஆய்வில் தெரிய வந்து உள்ளது.

இதன் மூலம் பாதாமை ஊற வைத்து சாப்பிடுவதால் பைட்டிக் ஆசிட் இருக்கும் அளவு குறைவதாக தெரியவில்லை என்பது முடிவில் தெரிய வந்து உள்ளது. 

முடி வளர்ச்சிக்கு உதவும் நெல்லிக்காய், செம்பருத்தி எண்ணெயை வீட்டிலேயே செய்யலாமா!

Canva