Top 8 Parenting Tips : சொல்பேச்சு கேட்க மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளா? இந்த 8 விஷயங்கள் அதற்கு காரணம்!
By Priyadarshini R Aug 09, 2024
Hindustan Times Tamil
குழந்தைகளுக்கு எளிதாக கவனச்சிதறல் ஏற்படும். எனவே அதனாலும் அவர்கள் நீங்கள் கூறுவதை கவனிக்காமல் போவார்கள். எனவே அவர்கள் கவனச்சிதலைத்தடுக்க யோகா, உடற்பயிற்சி போன்றவற்றில் அவர்களை ஈடுபடுத்துங்கள்.
எதிலும் அதிகம் இருந்தாலும், குழந்தைகள் நீங்கள் கூறுவதை கவனிக்கமாட்டார்கள். அதிகப்படியான சத்தம், திரை நேரம் அல்லது செயல்பாடுகள் அவர்களின் உணர்வுகளை மாற்றிவிடும் தன்மை கொண்டவை. எனவே உங்கள் குழந்தைகள் எதையும் அதிகப்படியாக செய்வதை தவிர்த்தல் நல்லது.
நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கும்போது, அவற்றை அதிகம் சிக்கல் நிறைந்ததாக மாற்றாதீர்கள். அது உங்கள் குழந்தைகளுக்கு புரியாமல் போகலாம்.
குழந்தைகள் சில நேரங்களில் நாம் கூறும் வழிமுறைகளை பின்பற்ற மாட்டார்கள். அவர்களுக்கு சுதந்திரம் தேவைப்படும்போது, அவர்கள் நமது கருத்துக்களை கவனிக்கவே மாட்டார்கள்.
அவர்களை அதிகமாக நீங்கள் கவனிக்கவில்லை என்பதை குழந்தைகள் உணர்ந்தால், அவர்கள் நீங்கள் கூறுவதை கவனிக்கமாட்டார்கள். இது உங்கள் மீதான எதிர்மறை கவனமாக இருந்தாலும் அவர்கள் உங்களை கவனிக்க மாட்டார்கள்.
பயம், பதற்றம், மனஅழுத்தம், சோர்வு என அனைத்தும் உங்கள் குழந்தைகளை பாதித்திருந்தால், அது அவர்களுக்கு கவனக்குறைவை ஏற்படுத்தும். இதனாலும் அவர்களும் நீங்கள் கூறுவதை கேட்கமாட்டார்கள்.
தொடர்ச்சியில்லாத விதிகளை அல்லது சிக்கல்களை விதித்தால், உங்கள் குழந்தைகள் குழப்பமடைவார்கள். எனவே அவர்களுக்கு தெளிவான விதிகளை சரியாக விதியுங்கள். அப்போது அவர்கள் கொஞ்சம் கவனிக்கத் துவங்குவார்கள். விதிமுறைகள் சரியாக இல்லாவிட்டாலும், குழந்தைகள் கவனிக்கமாட்டார்கள்.
’மேஷம் முதல் மீனம் வரை!’ தீரான பெண் ஆசையால் சீரழியும் ராசி எது? உஷாராக இருப்பது எப்படி?