இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய டாப் 5 நாடுகளை எவை என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Nov 23, 2024
Hindustan Times Tamil
உலகம் முழுவதும் சுமார் 25 நாடுகளுக்கும் மேல் இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லலாம்
பல்வேறு நாடுகளுடனான சமீபத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்தியர்கள் அந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்
தாய்லாந்து நாட்டுக்கு செல்லும் இந்தியர்களுக்கு 60 நாள்கள் வரை விசா கிடையாது. அழகான கடற்கரை, தேசிய பூங்காக்கள் என பல இடங்கள் இருக்கும தாய்லாந்து அதிக இந்தியர்கள் செல்ல விரும்பு அயல்நாடாக திகழ்கிறது
இந்தியர்களுக்கு 90 நாள்கள் விசா இல்லாமல் தங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது மாலத்தீவு. அழகான கடற்கரை, கண்களை கவரும் பவளப்பாரைகள் நிறைந்த தீவாக மாலத்தீவு உள்ளது
இந்தியர்கள் விரும்பி செல்லும் மற்றொரு கிழக்கு ஆசிய நாடாக இந்தோநேஷியா உள்ளது. 30 நாள்களுக்கு இங்கு இந்தியர்களுக்கு விசா கிடையாது. இங்குள்ள சுமத்ரா, பாலி, ஜாவா போன்ற பகுதிகளுக்கு செல்லலாம்
ஆப்பரிக்கா நாடான கென்யா செல்லும் இந்தியர்களுக்கு 90 நாள்களுக்கு விசா கிடையாது. அங்கு கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு, தேசிய பூங்கா, துர்கானா ஏரி போன்ற பல இடங்களை பார்த்து ரசிக்கலாம்
மத்திய கிழக்கு அரபு நாடாக இருந்து வரும் கத்தாரில் இந்தியர்கள் 30 நாள்கள் விசா இல்லாமல் இருக்கலாம். அங்கு கத்தார் தேசிய அருங்காட்சியகம், இஸ்லாமிக் ஆர்ட் அருங்காட்சியகம் போன்ற பலவற்றை ரசிக்கலாம்