ஏசியில் நீண்ட நேரம் இருப்பதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jun 09, 2024
Hindustan Times Tamil
கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பி சிறந்த வழியாக ஏசி இருந்து வருகிறது. ஆனால் அதிக நேரம் ஏசியில் இருந்தால் பல்வேறு உடல் நல பிரச்னைகளும் ஏற்படுகின்றன
சுவாச பிரச்னை, தலைவலி முதல் ஏசியால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளை பார்க்கலாம்
நீர் இழப்பு
காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை ஏசி குறைக்கிறது. இதன் விளைவாக உடலில் நீர் இழப்பு ஏற்படுகிறது
தலைவலி
வெப்பம், குளிர் என மாறி மாறி ஏற்படும் நிகழ்வு காரணமாக தலையில் இருக்கும் ரத்த நாளங்கல் சுருங்கவும், விரிவடையவும் செய்கிறது. இதன் விளைவாக தலைவலி ஏற்படுகிறது. நீண்ட நேரம் ஏசியில் இருப்பது சைனஸ் பிரச்னையை தூண்டும்
சருமத்தில் வறட்சி, அரிப்பு ஏற்படும்
நீண்ட நேரம் குளிர்ச்சியான வெப்பநிலையில் இருப்பதால் சருமத்தில் வறட்சி, அரிப்பு, எரிச்சல் ஏற்படும்
சுவாச பிரச்னை
ஏசியால் நீங்கள் வசிக்கும் அறையில் மாசுக்கள் குவிவதற்கான வாய்ப்பு உள்ளது. ஏசி இருக்கும் அறை ஜன்னல், கதவுகள் மூடப்பட்டி இருப்பதால் மாசுக்கள் வெளியேற வாய்ப்பு இல்லை. இதனால் சுவாச பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது
டாக்சிகளில் பயணிக்கும் பெண்கள். இந்த பாதுகாப்பு குறிப்புகளை மறந்துவிடாதீர்கள்!