ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் இருக்கிறோம். கோடை வெயில் நாடு முழுவதும் வெளுத்து வாங்கி கொண்டு இருக்கிறது. இன்றைய தினத்தில் இந்தியாவின் முக்கியமான வெப்பநிலை அளவை இங்கு காணலாம். 

By Suguna Devi P
Apr 14, 2025

Hindustan Times
Tamil

சென்னையில் நேற்று (13/042025) அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியல் வெப்பநிலை பதிவாகியிருந்த நிலையில் இன்று 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இன்று 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. 

மும்பை நகரின் இன்றைய வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் இருக்கிறது. காலை முதல் குறைவாக இருந்த வெப்பநிலை நண்பகலில் அதிகரித்து  வருகிறது. 

தமிழ்நாட்டின் முக்கிய நகரமான மதுரையில் சென்னையை விட அதிகபட்ச வெப்பநிலை நிலவுகிறது. மதுரையில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. 

இந்தியாவில் சில நகரங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸ் வரை சென்றது. அதில் மகாராஷ்டிரா மாநிலம் அச்சல்பூர் ஒன்றாகும். 

தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் இன்று அதிக்கப்பட்சமாக 36 டிகிரி செல்சியல் வெப்பநிலை நிலவுகிறது. 

கர்நாடகாவில் அமைந்துள்ள பெங்களூருவில் 32 டிகிரி செல்சியஸ் நிலவுகிறது. 

கோடை காலத்தில் சில எளிய டிப்ஸ்களை பின்பற்ற சருமத்தில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். சருமத்தை பேனி காக்க உதவும் சில எளிய டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம்