ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மிதக்கும் அது என்ன?
ஊதுபத்தி.
ஆலமரம் தூங்க, அவனியெல்லாம் தூங்க, ஸ்ரீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க ஒருவன் மட்டும் தூங்கவில்லை. அவன் யார்?
மூச்சு.
கலர்பூ கொண்டைக்காரன், காலையில் எழுப்பி விடுவான்.
சேவல்.
கத்திப்போல் இலை இருக்கும். கவரிமான் பூ பூக்கும், தின்ன பழம் கொடுக்கும். தின்னாத காய் கொடுக்கும். அது என்ன?
வேம்பு.
கடலில் கலக்காத நீர், எவரும் குடிக்காத நீர். அது என்ன?
கண்ணீர்.
கந்தல் துணி கட்டியவன் முத்து பிள்ளைகளை பெற்று மகிழ்ந்தான். அவன் யார்?
சோளக்கதிர்.
மேலிழும் துவாரம், கீழும் துவாரம், இடத்திலும் துவாரம், வலத்திலும் துவாரம், உள்ளேயும் துவாரம், வெளியேயும் துவாரம். ஆனாலும் தண்ணீரை சேமித்து வைப்பேன். நான் யார்?
பஞ்சு.
Vastu Tips: வீட்டிற்குள் படிக்கட்டுகள் கட்டுவது சரியா, தவறா?