மார்ச் 27ம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..
By Karthikeyan S Mar 27, 2025
Hindustan Times Tamil
மேஷம்: உத்தியோக பணிகளில் மதிப்புகள் மேம்படும். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். தாமதம் குறையும் நாள்.
ரிஷபம்: கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். கீர்த்தி நிறைந்த நாள்.
மிதுனம்: அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ப திருப்பங்கள் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.
கடகம்: இடமாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். வியாபார வரவுகளில் தாமதம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
சிம்மம்: மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.
கன்னி: பொருளாதார நிலை உயரும். வருமான உயர்வை பற்றி சிந்திப்பீர்கள். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணிவு வேண்டிய நாள்.
துலாம்: சாதுரியமாக செயல்பட்டு செல்வாக்கை பெருக்கிக் கொள்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
விருச்சிகம்: உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தாய்வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். மேன்மை நிறைந்த நாள்.
தனுசு: திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். தெளிவு பிறக்கும் நாள்.
மகரம்: மனதை உறுத்திய கவலைகள் குறையும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைகளை தகர்த்தெறியும் மனப்பக்குவம் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.
கும்பம்: விமர்சன கருத்துக்களை தவிர்க்கவும். உடல் நலனில் கவனம் வேண்டும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் அலைச்சல் ஏற்படும். கவலை மறையும் நாள்.
மீனம்: வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். உத்தியோக பணிகளில் பதற்றம் இன்றி செயல்படவும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வரவு நிறைந்த நாள்.
மஞ்சள் மற்றும் இஞ்சி தேநீர் குடிப்பதால் கிடைக்கும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!