மே 19ம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..
By Karthikeyan S May 19, 2025
Hindustan Times Tamil
மேஷம்: பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தொழில் ரீதியான பொருளாதாரம் மேம்படும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வெற்றி நிறைந்த நாள்.
ரிஷபம்: எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் மறையும். உயர் அதிகாரிகளின் இடத்தில் பொறுமை வேண்டும். அமைதி நிறைந்த நாள்.
மிதுனம்: வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பயனற்ற பேச்சுகளை குறைத்துக்கொள்ளவும். இரக்கம் நிறைந்த நாள்.
கடகம்: எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். கோபம் மறையும் நாள்.
சிம்மம்: வியாபாரத்தில் இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். தாமதங்கள் விலகும். திறமைகள் வெளிப்படும் நாள்.
கன்னி: மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். மன ஒருமைப்பாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பாராட்டு கிடைக்கும் நாள்.
துலாம்: கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். வியாபாரம் தொடர்பான இடமாற்ற எண்ணங்கள் பிறக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பணிவு வேண்டிய நாள்.
விருச்சிகம்: குடும்பத்தில் ஆதரவு மேம்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். நலம் நிறைந்த நாள்.
தனுசு: மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். கவனம் வேண்டிய நாள்.
மகரம்: மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் ஏற்படும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் மறைமுகமான சில தடைகள் ஏற்படும். சக ஊழியர்கள் இடத்தில் பொறுமையை கையாளவும். நட்பு நிறைந்த நாள்.
கும்பம்: வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் அமையும். தாமதம் விலகும் நாள்.
மீனம்: மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். கருத்துக்களுக்கு மதிப்பு ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளால் லாபம் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆதரவு ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.