ஏப்ரல் 18ம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..

By Karthikeyan S
Apr 18, 2025

Hindustan Times
Tamil

மேஷம்: கடன் சார்ந்த விஷயத்தில் கவனமாக இருக்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சிக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள்.

ரிஷபம்: உயர்கல்வியில் எதிர்பாராத சில அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான முடிவுகளில் ஆலோசனை பெற்று செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.

மிதுனம்: வியாபாரம் ரீதியான சில அறிமுகத்தால் லாபம் மேம்படும். மனை வியாபாரத்தில் புதுமையான சூழல் உண்டாகும். மனதிற்கு இதமான செய்திகள் கிடைக்கும். 

கடகம்: கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முயற்சி நிறைந்த நாள்.

சிம்மம்: பொன், பொருட்கள் மீதான ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செயல்படவும். பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபாடு உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.

கன்னி: சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உறவுகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

துலாம்: உழைப்பிற்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஓய்வு கிடைக்கும் நாள்.

விருச்சிகம்: பயணத்தால் பலன் கிடைக்கும். வருமானம் திருப்தியை தரும். உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். உத்தியோகத்தில் உயர்வு பற்றிய செய்திகள் கிடைக்கும். தனம் மேம்படும் நாள்.

தனுசு: அரசு தொடர்பான காரியங்களில் சிந்தித்து செயல்படவும். மறைமுகமான எதிர்ப்புகளால் சஞ்சலம் உண்டாகும். கடன் சார்ந்த உதவிகளில் அலைச்சல் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

மகரம்:எதிர்பாராத பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். அலைபேசி வழியாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் ஏற்படும். பாசம் மேம்படும் நாள்.

கும்பம்: சுப நிகழ்ச்சிகளால் மனம் மகிழ்ச்சியடையும். புதிய தொழில் தொடங்குவது சார்ந்து எண்ணங்கள் மேம்படும். திட்டமிட்ட காரியம் கைகூடும். சிரமம் அகலும் நாள்.

மீனம்: உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். அரசு வழியில் சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுகம் மேம்படும் நாள்.

கவனம் மக்களே.. சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் எந்த 3 ராசிகளுக்கு பாதகம்!