ஏப்ரல் 16ம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..
By Karthikeyan S Apr 16, 2025
Hindustan Times Tamil
மேஷம்: உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துகொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் அமையும்.
ரிஷபம்: தொழில்ரீதியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சிரமம் மறையும் நாள்.
மிதுனம்: மனதை உருத்திய சில கவலைகள் விலகும். பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் குறையும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். களிப்பு நிறைந்த நாள்.
கடகம்: எதிர்பார்த்த சில காரியங்களில் வெற்றிப் பெறுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.
சிம்மம்: எதிர்பார்த்த வரவு வந்து சேரும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் விலகும். அரசு சார்ந்த காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். பகை விலகும் நாள்.
கன்னி: பழைய கடன் பிரச்சனைகள் குறையும். திட்டமிட்ட காரியத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். வரவு நிறைந்த நாள்.
துலாம்: கல்வி பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். கடன் நெருக்கடிகள் ஓரளவு குறையும். வியாபாரத்தில் புதிய யுக்திகளால் மாற்றம் பிறக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
விருச்சிகம்: நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வது நல்லது. பெரியோர்களின் ஆலோசனைகள் சில மாற்றத்தை ஏற்படுத்தும். முக்கிய கோப்புகளை கையாளும் போது கவனம் வேண்டும். பிரீதி நிறைந்த நாள்.
தனுசு: எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். கவனம் வேண்டிய நாள்.
மகரம்: திடீர் வரவுகளால் சங்கடங்கள் நீங்கும். எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உழைப்பு மேம்படும் நாள்.
கும்பம்: வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். நண்பர்களிடம் அனுசரித்து செல்லவும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். யோகம் நிறைந்த நாள்.
மீனம்: வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் புதிய அனுபவம் ஏற்படும். பணிவு வேண்டிய நாள்.
பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றைத் தேர்வு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரை அணுகவும்.
வீட்டுக்குள்ளேயே ஏசியை ஆன் செய்துவிட்டு குளிர்ச்சியான சூழலில் இருப்பதை அனைத்து வயதினரும் விரும்புகிறார்கள். ஆனால் நீண்ட நேர ஏசியில் இருப்பது சில உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்