ஏப்ரல் 15ம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..

By Karthikeyan S
Apr 15, 2025

Hindustan Times
Tamil

மேஷம்: பொருளாதார நெருக்கடியால் சங்கடம் அதிகரிக்கும். செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பார்ப்பு தாமதமாக நிறைவேறும். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்: மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அமைதியான சூழல் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.

மிதுனம்: உடல் ஆரோக்கியம் மேம்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வருமானம் தேவைக்கு போதுமானதாக இருக்கும். வாகனப் பராமரிப்பில் கவனம் வேண்டும். நட்பு மேம்படும் நாள்.

கடகம்: உத்தியோகத்தில் சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பற்றற்ற தன்மை உண்டாகும். தன வரவுகள் திருப்தியாக இருக்கும். நற்செயல் நிறைந்த நாள்.

சிம்மம்: பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் குறையும். சுபகாரியம் தொடர்பான செயல்களில் தாமதம் உண்டாகும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. சிந்தனை மேம்படும் நாள்.

கன்னி: எதிர்பாராத வரவு வந்து சேரும். மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பத்தில் இருந்துவந்த நெருக்கடி விலகும். வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகும். சிக்கல் மறையும் நாள்.

துலாம்: எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வரவு நிறைந்த நாள்.

விருச்சிகம்: எதிர்பார்த்த சில காரியங்கள் தள்ளிப்போகும். திடீர் பயணம் உண்டாகும். அரசு வழியில் ஆதாயம் காண்பீர்கள். இணையம் சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பரிசு கிடைக்கும் நாள்.

தனுசு: திடீர் பயணம் மூலம்  சோர்வு ஏற்படும். நினைத்த பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும்.  முயற்சியில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

மகரம்: எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். விருத்தி நிறைந்த நாள்.

கும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். நேர்மறையான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.

மீனம்: சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். உடல் நிலையில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். திடீர் செலவுகள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

பொறுப்பு துறப்பு:  இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றைத் தேர்வு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரை அணுகவும்.

கோடை வெயிலுக்கு இதமாக குளிர்ச்சியான பானங்கள், நீர் பருக வேண்டும் என மனம் ஏங்குவது இயல்பானது தான். இயற்கையான முறையில் குளிர்ச்சியான நீர் குடிப்பதற்கான சிறந்த வழியாக மண்பானை நீர் உள்ளது