மார்ச் 14ம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான தினசரி பலன்கள் இதோ..
By Karthikeyan S Mar 14, 2025
Hindustan Times Tamil
மேஷம்: எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் நல்ல பெயர்கள் கிடைக்கும். தன வரவுகள் அதிகரிக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.
ரிஷபம்: வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சில மாற்றங்கள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். போட்டி நிறைந்த நாள்.
மிதுனம்: இனம் புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சாந்தம் நிறைந்த நாள்.
கடகம்: பணிபுரியும் இடத்தில் அசதிகள் உண்டாகும். மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் இன்னல்களை தவிர்க்க முடியும். ஓய்வு நிறைந்த நாள்.
சிம்மம்: உத்தியோகப் பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். ஆதாயம் நிறைந்த நாள்.
கன்னி: எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபார பணியில் சில மாற்றங்கள் மூலம் மேன்மை உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நட்பு நிறைந்த நாள்.
துலாம்: பணி நிமித்தமான திடீர் மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகள் ஈடேறும். மனதில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் பிறக்கும். அனுபவம் நிறைந்த நாள்.
விருச்சிகம்: உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் மூலம் மேன்மை உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். செலவு நிறைந்த நாள்.
தனுசு: பேச்சுக்களால் ஆதாயம் உண்டாகும். புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் ஏற்படும். உழைப்புக்கு உண்டான முன்னேற்றம் ஏற்படும். கவலை மறையும் நாள்.
மகரம்: திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.
கும்பம்: குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். பகை விலகும் நாள்.
மீனம்: திடீர் பயணங்களால் சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
’விடாமல் உயரும் தங்கம்’ தங்கம் விலை உயர்வுக்கான டாப் 5 காரணங்கள்!