ஏப்ரல் 14ம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..
By Karthikeyan S Apr 14, 2025
Hindustan Times Tamil
மேஷம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் வர்த்தகம் சார்ந்த பணிகளில் புதிய அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மையான சூழல் ஏற்படும். நற்செயல் நிறைந்த நாள்.
ரிஷபம்: புதிய நபர்களால் சில மாற்றங்கள் உண்டாகும். மனதை உருத்திய சில கவலைகள் குறையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். விருத்தி நிறைந்த நாள்.
மிதுனம்: உறவினர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். விலகிச் சென்றவர்களைப் பற்றிய சிந்தனைகள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
கடகம்: எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.
சிம்மம்: வாகனங்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். இரக்கம் வேண்டிய நாள்.
கன்னி: சமூகம் சார்ந்த நிகழ்வுகளால் புதிய அனுபவம் ஏற்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். வெளிவட்டத்தில் செல்வாக்கு மேம்படும். சாந்தம் நிறைந்த நாள்.
துலாம்: உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். கடன் பிரச்னைகளை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். லாபம் நிறைந்த நாள்.
விருச்சிகம்: எதிர்பாராத பொருட்சேர்க்கைகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். தொல்லை மறையும் நாள்.
தனுசு: புதிய செயல்திட்டங்களில் கவனம் வேண்டும். புதிய வேலை முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். வரவு கிடைக்கும் நாள்.
மகரம்: வேலையாட்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். தொலைதூர சுபச்செய்திகளின் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். அனுபவம் கிடைக்கும் நாள்.
கும்பம்: வீண்செலவுகளால் மனச்சஞ்சலம் ஏற்படும். எதிர்காலம் குறித்த சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். சிரமம் அகலும் நாள்.
மீனம்: பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். சமூகம் சார்ந்த பணிகளில் அங்கீகாரம் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.
பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றைத் தேர்வு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரை அணுகவும்.
வீட்டுக்குள்ளேயே ஏசியை ஆன் செய்துவிட்டு குளிர்ச்சியான சூழலில் இருப்பதை அனைத்து வயதினரும் விரும்புகிறார்கள். ஆனால் நீண்ட நேர ஏசியில் இருப்பது சில உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்